உடல்
உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள்
சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக
இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம். இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி, நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.
ரத்தத்தை சுத்தம் செய்ய: ரத்தம் சுத்தம் செய்வதற்குக் குங்குமப்பூ 5, கொஞ்-சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிடவும். இது நல்ல சக்தியைக் கொடுக்கும்.
இதயம் வலுவடைய: தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பும் வராமல் தடுக்கும். இதயம் வலுவடையும்.
நல்ல தூக்கம் வேண்டுமா?: காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசாப் பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது நல்ல தூக்கத்தையும், சுகாதாரமான உடல்நலத்தையும் கொடுக்கும். கசகசா பாயசமும் செய்து சாப்பிடலாம்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த: சிவப்புக் கரும்பின் சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்சு தேனை கலந்து ஆஸ்துமா ஆரம்பித்தவுடனேயே குடிக்கவும். ஒரு வாரத்திற்குத் தினமும் இரண்டு முறை குடித்து வரவும். சுத்தம் செய்த தூதுவளைக் கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து, படுக்கப்போவதற்கு முன் குடிக்கவும்

Via Karthikeyan Mathan