- All proteins are made up from building blocks called amino acids. Imagine a string of sausages where the whole string is the protein and each sausage is a different amino acid
Not all proteins are created equal!
It depends on their amino acid make up - there are over 20 different ones and nine are essential. As the body cannot make them itself they have to come from food.
There are complete and incomplete proteins. Incomplete proteins don't contain adequate amounts of all the nine essential amino acids
Animal protein - eg. eggs meat, chicken, fish and dairy are complete proteins.
Plant protein - eg fruit, veg, grains, peas, beans, nuts and seeds are incomplete. Soya is an exception, being a complete protein.
That's why we need to combine different proteins e.g. grains and beans (beans on toast), grains and dairy (pasta with cheese) to get the best combination of amino acids.
புரோட்டீன் - இது நம்ம உடலோட அடிப்படை, இந்த உடல் அப்படிங்கற கட்டிடம் உருவாக காரணமான செங்கல், மணல் எல்லாம் (BUILDING BLOCKS OF THE BODY). நம்ம நகம், முடி தொடங்கி, இந்த புரோட்டீன்கள் இல்லாத உறுப்புகளே இல்லை. நம்ம உடல் முழுக்க புரோடீன்கள் இருந்தாலும் இந்த புரோட்டீன்கள் உருவாக அடிப்படையா இருக்கிறது இருபதே இருபது அமினோ அமிலங்கள்.
இந்த இருபது அமினோ அமிலங்கள் அப்படிங்கற வேதி பொருட்கள் ஒரு மணி மாலை மாதிரி கோர்த்து புரோட்டீன்கள் உருவாகும். ஒவ்வொரு புரோட்டீனும் அதுக்கு மட்டுமே சொந்தமான வரிசையில தான் இந்த அமினோ அமிலங்கள் கோர்க்க பட்டு இருக்கும். அதோட இந்த புரோட்டீன்கள்ள இருக்கிற அமினோ அமிலங்களோட எண்ணிக்கையும் வேறுபாடும். இப்போ நம்ம ஒரு செல்லுல மட்டும் 3000 விதமான புரோட்டீன்கள் இருக்குன்னா, இந்த 3000 புரோட்டீன்களும் 3000 விதமான வரிசையில இருக்கும். அமினோ அமிலங்களோட எண்ணிக்கையும் வேறுபாடும்.
அமினோ அமிலங்கள் தான் ஒரு புரோட்டீனோட முதுகெலும்பு மாதிரி. இந்த இருபது அமினோ அமிலங்களும் தன்னோட அடிப்படை கட்டமைப்பில் ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு, அமினோ மூலக்கூறு மற்றும் ஆசிட் மூலக்கூறை பொதுவாகவும் ஒரே ஒரு வேறுபாடும் மூலக்கூறை ஒரு பகுதியாகவும் கொண்டது. இந்த பகுதி மூலக்கூறு ஒவ்வொரு அமினோ அமிலத்துக்கும் தனி தனியாகவும் வேறு வேறு விதமானதாகவும் இருக்கும். ஒரு அமினோ அமிலத்தில் உள்ளது வேறு ஒரு அமினோ அமிலத்தில் இருக்காது. இந்த வேறுபாடும் மூலக்கூறை பொறுத்தே அதன் வேதி தன்மைகள் அமையும். உதாரணத்துக்கு, சிரின் மற்றும் திரியோனைன் அதனுடைய கட்டமைப்பில் வேறுபாடும் பகுதி மூலக்கூறாக -OH கொண்டது. அதாவது -OH என்பது தண்ணீர் மூலக்கூறு. எனவே, இது தண்ணீரில் கரையும் தன்மை கொண்டது. இதுவே, பீனைல் அலனைன் தன்னோட பகுதி மூலக்கூறா கரிம வேதி பொருளை கொண்டிருக்கும். இதற்கு தண்ணீரில் கரையும் தன்மை இல்லை. அதனால இது கரைக்க தண்ணீரை பயன்படுத்த முடியாது.
ஒரு புரோட்டீன் உருவாகி, மடிக்கப்படுபோது அதன் முதல்நிலை அமைப்பில் இருக்கிற அமினோ அமிலங்களில் தண்ணீரில் கறியும் அமினோ அமிலங்கள் அதன் மேற்புறமா இருக்கிற மாதிரி தான் மடிக்கப்படும். அப்போ தான் அந்த புரோட்டீன் தயாரிக்கப்பட்ட இடத்துல இருந்து அதனுடைய வேலைக்காக வேறு இடத்துக்கு இரத்தம் மூலமா அனுப்பப்படும் போது அது இரத்தத்துல கலக்க முடியும். ஏன்னா இரத்தம் என்பது தொண்ணூறு சதவிதம் தண்ணீரால் ஆனது. இதுவே, மற்ற அமினோ அமிலங்கள் மேற்புறமா வந்துட்டா, அதனோட வேதியியல் தன்மை மாறி இரத்தத்துல கலக்க முடியாம போயிடும்.
இத்துனூண்டு செல்லுக்குள்ள எத்தனை எத்தனை பிரச்சனை, எவ்வளவு விசயங்களை கவனமா பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்திங்களா? அதுதான் இயற்கை. ஒரு மண்ணும் பண்ணாம நாம இந்த ஆட்டம் ஆடறமே... இவ்வளவையும் பார்த்து பார்த்து பண்ற இயற்கை, ஆடுச்சின்னா நாம என்ன ஆவோம்...?
புரோட்டீன்கள் எப்படி இருக்கணும் அப்படிங்கற செய்தி அதனோட ஜீன்ல இருக்கு. ஜீன் அப்படிங்கறது ஒன்னும் இல்ல... நம்ம DNA தான்... முழு நீளமா இருந்தா அது DNA .... அந்த DNA டைட்டா பேக் ஆகி இருந்தா குரோமோசோம்... இந்த நீளமான DNA வுல எந்த எந்த பகுதிகள் இந்த புரோட்டீனுகான செய்தியை உள்ளடக்கி இருக்கோ அது ஜீன். உதாரணத்துக்கு ஒரு நீளமான பாசிமணி மாலையை மாதிரி இருக்கிற DNA வோட புரோட்டீன் பத்தின செய்தி கொண்ட சின்ன சின்ன பகுதிகளை நறுக்கி எடுத்தா அது ஜீன். ஒரு ஜீன் இன்னொரு ஜீனில் இருந்து புரோட்டீன் பத்தின செய்தி இல்லாத வெறும் DNA பகுதிகளால பிரிக்கப்பட்டு இருக்கும். அதாவது ஒரு ஜீனுக்கும் இன்னொரு ஜீனுக்கும் நடுவில இருக்கிற பகுதி எந்த செய்தியையும் கொண்டிருக்காது. இப்படி ஒரு ஜீன்ல இருந்து புரோட்டீன் உருவாகும் முறைக்கு டிரான்ஸ்லேசன் அப்படின்னு பேரு.
புரோட்டீனோட அடிப்படை அமைப்பை மொத்தம் நாலு விதமா பிரிக்கலாம். அதாவது ஒரு முழுமையான வேலை செய்யும் திறனுள்ள புரோட்டீன் உருவாக மொத்தம் நாலு நிலைகளை கடந்து வரணும். டிரான்ஸ்லேசன்ல வெறும் அமினோ அமிலங்களை கொண்ட நீளமான செயின் மட்டுமே உருவாகும். ஆனா இது மட்டுமே ஒரு முழுமையான புரோட்டீனா மாறிட முடியாது. இதை இன்னும்நிறைய வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி, அதுக்குன்னே ஒதுக்கப்பட்ட முறையில மடிச்சி, (உதாரணம், நீளமான ரிப்பனை வேற வேற மாதிரி மடிச்சி, சுருட்டி வெச்ச மாதிரி ) முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அல்லது இறுதி நிலையில முழுமையான புரோட்டீன்களா உருவெடுக்கும். பிறகு தான் அது ஒரு முழுமையான புரோட்டீனா மாற முடியும். இந்த மடிக்கிற முறையும் விதமும் கூட ஒவொரு புரோட்டீனுக்கும் வேறுபாடும். இப்படி புரோட்டீன் உருவாகும்போது அமினோ அமிலங்களோட வரிசையிலும், எண்ணிக்கையிலும் ஏதாவது மாறுதலோ தவறுகளோ ஏற்பட்டா அல்லது உருவான செயின் மடிக்கப்படும்போது ஏதாவது தவறு ஏற்பட்டா அந்த புரோட்டீன் முழுமையா செயல்படாது. அது அழிக்கப்பட்டு திரும்ப புதுசா தான் உருவாகனும். அழிக்கப்படலன்னா அது ஏதாவது நோயா மாறவும் வாய்ப்பு உண்டு.
இது தவிர நான்காவதாவும் ஒரு நிலை இருக்கு. சில புரோட்டீன்கள் தன்னோட அமைப்பில் இரண்டு அல்லது மூன்று இறுதிநிலை அமைப்பை கொண்டு ஒரே ஒரு புரோட்டீனாக இருக்கும். இந்த புரோட்டீன்களுக்கு இது தான் இறுதிநிலை அப்படின்னும் சொல்லலாம். ஆனால் இது சில அளவில் எடையில் பெரிய புரோட்டீன்களுக்கு மட்டுமே பொருந்தும்