ஒரு ராணுவ அதிகாரியின் பெயரை
கேட்டால் காஷ்மீரின் ட்ரால் பகுதியிலிருக்கும் தீவிரவாதிகள் பயந்து பாகிஸ்தானுக்கு
சென்று விட யோசிப்பார்கள்.
அவர் பெயர் மேஜர் ரிஷி
ராஜலக்ஷ்மி (ராஜலக்ஷ்மி என்பது அவரின் தாயின் பெயர்).
இவரை கொலைசெய்ய முயன்ற
தீவிரவாதிகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள்.
காலத்தை வென்ற போர்வீரன்.
இந்த தென் இந்தியாவின் ராணுவ
அதிகாரியை காஷ்மீர் மக்கள் பாசமாக கான் சாஹிப் என்று அழைக்குமளவிற்கு
பொதுமக்களிடம் நெருங்கி பழகினார்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு இவர்
தான் சூப்பர் ஹீரோ.
இவரை பார்த்து ராணுவத்தில்
சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் அதிகம்
காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ஏராளம்,இவரின் சகாக்கள் இவரை பயத்திற்கு பயம் கொடுக்கும் ராணுவ அதிகாரி எதற்கும் அஞ்சாமல் துணிவுடனும் தன்னந்தனியாக எதிரிகளின் சந்திக்கும் தைரியமுடையவர் என்கிறார்கள்.
மார்ச் 2017ல் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள்
பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து,மேஜர்
ரிஷி தலைமையிலான 42 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை அதிரடிக்கு தயாரானது.
மிகவும் ஜன நெருக்கம் மிக்க பகுதியென்பதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் இருக்க
கூடாது என்பதற்காக மேஜருடன் சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டிற்குள்
நுழைந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக
தீவிரவாதி ஒருவன் சுட்ட குண்டுகல் மேஜர் ரிஷியின் மூக்கையும் தாடையையும் பதம்
பார்த்தது...
பாதி முகம் சிதைந்த நிலையிலும்
தனி ஒருவனாக இரு தீவிரவாதிகளை சுட்டு கொன்றார்.
மிகவும் ஆபத்தான நிலையில்
அனுமதிக்கப்பட்ட அவருக்கு 14 முறை வெவேறு கட்டங்களில் அறுவைசிகிச்சை
மேற்கொள்ளப்பட்டது. வாழ்வு முழுவதும் பாதி முகத்தை துணியால் மறைத்தே
உயிர்வாழவேண்டிய நிலை.
மூன்று வருட மருத்துவ
சிகிச்சைக்கு பின் இப்பொழுது முழுத்தகுதி பெற்ற மேஜர் #மீண்டும் காஷ்மீரில்
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து தன்னை
காஷ்மீருக்கு அனுப்புமாறு ராணுவ தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவரை போன்ற மாவீரர்களை
உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம்...
இவரது வீர தீர செயலை பாராட்டி
இந்திய அரசாங்கம் இவருக்கு சேனா மெடல் அறிவித்துள்ளது.
வாழ்த்துக்கள்
தேச காவல் தெய்வமே..!
ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!
நன்றி இணையம்