மார்கழி.....
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என கிருஷ்ணர் பகவத்கீதையில்
கூறுகிறார்.
இம்மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் பற்றி கேட்க கிளிக் பண்ணுங்க
Subscribe பண்ணுங்க....
https://www.youtube.com/channel/UC_c45MUAXulFSkgI6gvJ9ig
தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது.
சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம்
தேவர்களின் மாதமாக மார்கழி போற்றப்படுகிறது.
தேவர்களுக்கான பொழுதில், அதிகாலை நேரமாக இந்த மார்கழி மாதம்
குறிப்பிடப்படுகிறது.
இறைவனை முழுவதும் வணங்கும்
மாதம் மார்கழி மாதம் ஆகும்.
மார்கழியில் மேற்கொள்ளப்படும் அதிகாலை
இறைவழிபாடு பற்றி,
மாணிக்கவாசகர்
திருவெம்பாவையிலும்,
ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும்
போற்றியுள்ளனர்.
சிவன் கோவில்களில் திருவெம்பாவையும்,
விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும்
திருப்பாவை
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் தினம் பாட
வேண்டும்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில்
சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
நம் உடலை நல்லவிதமாக ஆக்கிக்கொள்ள உரிய மாதம் மார்கழி ஆகும்.
இம்மாதத்தில் ஓசோன் படலமானது பூமிக்கு மிக
அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு
அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த ஓசோன் மண்டலத்தை வலுபடுத்த இப்பூமியில்
உள்ள ஒவ்வொருவரும்
மழைக்கடவுளான இந்திரனுக்கான
இந்திர திருவிழாவான
பொங்கல் திருநாள் அன்று
ஓர் மரக்கன்றை தங்களது இடத்திலோ
பொது இடத்திலோ
வைக்க வேண்டும்.
வனுண்டால சந்ததியினரின் நலத்திற்காக...
மார்கழி மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும்
நடத்தப்படுவதில்லை.
விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது.
இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான்
அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது.
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம்.
இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை
திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது.
அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி
வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை
பெருக வைப்பர் என்பது ஐதிகம்.
அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை
நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கம்
ஏற்படுத்தப்பட்டது.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது
தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே
ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு
ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு
பகல் பொழுதாக அமைகிறது.
இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம்.
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை
தட்சிணாயணம் என்று சொல்கிறோம்.
இந்த தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப் பொறுத்தவரை இரவுப் பொழுது - நிறைவடையும் காலமான
அதிகாலை 4 மணி
முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று
பொருள் கொள்ளலாம்.
இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற
விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6
மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்
வண்ணக் கோலமிடுவதை வழக்கமாக்கிக்
கொண்டனர்.
மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக்
கூடாது என்று சொல்வார்கள்.
ஏனென்றால் இது விதை வளர்வதற்கான காலம் அல்ல.
அதனால் தான் மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர் தன்மை பெற்று
வளராமல் போய்விடும் என்பதாலேயே விதைப்பது இல்லை
மார்கழி மாதத்தில்
தியானம், யோகா,
தெய்வீகம், ஆன்மிகம் என்று
இருந்தால் சாதகமான அதிர்வுகளை கொடுக்கும்.
நன்றி இணையம்