எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி.
மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி
சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.
எனக்கு
எந்த பிரச்னையும் இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக
எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யலாமா? அல்லது பிரச்னை எதுவும் வந்த பின்னர்
பரிசோதனை செய்யவேண்டுமா?
வயிற்று சம்பந்தமாக ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டும் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்தால் போதுமானது.
எனக்கு வெளி மூலம் உள்ளது. இதுவரை எந்த சிகிச்சைக்கும் செல்லவில்லை. மலம்
கழிப்பதிலும் சிக்கல் இல்லை. நான் கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்யவேண்டுமா?
வெளி மூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளே
பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும். எனவே, கொலொனோஸ்கோபி
பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
நான் வீட்டில் சிக்கன் சாப்பிட்ட நாட்களில் வயிறு எரிச்சல் ஏற்படுகிறது. காரணம் என்ன?
கோழி இறைச்சி பழையதாக இருக்கலாம். அல்லது எண்ணெய் அதிகமாக உபயோகித்து
பொரித்திருக்கலாம். அல்லது காரம் அளவிற்கதிகமாக சேர்த்திருக்கலாம்.
நான் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட மறுநாள் வயிறு வலிக்கிறது. என்னிடம் கோளாறா? அல்லது ஓட்டல் உணவில் கோளாறா?
ஓட்டல் உணவில்தான் பிரச்னை. வீட்டில் சமைக்கும்போது சுத்தமாக சாதாரண
உணவுப்பொருட்கள் மற்றும் அதனுடன் சேர்க்கும் பொருட்களும் எண்ணெய் வகைகளும்
சாதாரணமானதாகவும் சுத்தமானதாகவும் இருக்கும். மற்றும் பக்குவமாகவும்
சமைப்பார்கள். ஆனால் ஓட்டல்களில் சுவையை அதிகரிப்பதற்காக நாம் உபயோகிக்கும்
பொருட்களுக்கு வழக்கத்திற்கு மாறாக உணவுப்பொருட்களை உபயோகிக்கிறார்கள்.
எண்ணெய், வேதிப்பொருட்கள் கலந்த உணவுப்பொருட்கள், பழைய இறைச்சி,
அளவிற்கதிகமான காரம் போன்றவற்றை உபயோகிப்பதால் நாவிற்கு நல்ல சுவையாக
உள்ளது. அந்த பதார்த்தத்திற்கு சிறப்பான பெயர்களையும் சூட்டிவிடுகிறார்கள்.
ஆனால் வயிற்றிற்கோ ஆபத்தை விளைவிக்கிறது.
நான் காலை உணவுக்கு
முன் குடிநீர் அரை லிட்டர் குடிக்கிறேன், பின்பு ஒரு லிட்டர், மதிய
உணவுக்கு பின்னர் குடிப்பதில்லை. மீண்டும் காலையில்தான் குடிக்கிறேன். நான்
குடிநீர் குடிக்கும்முறை சரிதானா?
எவ்வளவு தண்ணீர்
குடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் தண்ணீர்
அருந்துவது நல்லது. இரவில் உறங்குவதற்கு முன் தண்ணீரை அளவிற்கதிகமாக
குடிப்பதால் சிறுநீர் கழிப்பதற்காக தூக்கம் கெட்டு எழுந்திருக்க நேரிடும்.
இரைப்பை கேன்சர் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்கும் வழிமுறைகள் உண்டா?
அதிகமான ஆல்கஹால், புகைப்பிடிக்கும் பழக்கம், அளவிற்கதிகமாக காரம், துரித
உணவை உட்கொள்வதாலும் மற்றும் மரபணு மூலமாகவும் இரைப்பையில் கேன்சர் வர
வாய்ப்பிருக்கிறது.
நான் தினசரி காலையில் ஒரு கப் தயிர் கலந்து
ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறேன். இது வயிறு, குடலுக்கு நல்லதா? இந்த உணவு
முறையால் பாதிப்பு ஏதும் உண்டா?
தினசரி உணவில் தயிர்
சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் கலந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது தயிர்
சேர்த்துக்கொள்வதால் காரத்தை சரிகட்டிவிடும். எனவே, தயிர்
சேர்த்துக்கொள்வது நல்லது.
எனக்கு வயது 16. கடந்த 2 ஆண்டுகளாக 2
மாதத்திற்கொருமுறை வாயில், நாக்கில் புண் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு
பின்னர் தானாக சரியாகிறது. வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வரும்
என்கிறார்கள் உண்மையா? இதற்கு சிகிச்சை என்ன?
வயிற்றில் புண்
இருந்தால் வாயில் புண் வர வாய்ப்புண்டு. மேலும், வைட்டமின்
குறைபாடிருந்தாலும் வாயில் புண் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே,
எண்டோஸ்கோபி மூலமாக வயிற்றை பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஒரு
மருத்துவமனையில் 3 முறை எண்டோஸ்கோபி செய்தேன், அதன்பிறகு உள்ளே எரிச்சல்
தெரிகிறது. இதற்கு காரணம் அடிக்கடி எண்டோஸ்கோபி செய்ததன் காரணமாகவா?
எண்டோஸ்கோபி கருவியானது மிகவும் மெல்லிய வளைந்துகொடுக்கக்கூடிய அமைப்பை
கொண்டிருக்கும். இதனால் வயிற்றின் பக்கவாட்டில் கீறல் ஏற்படாது. மேலும்
நன்கு பயிற்சிபெற்ற மருத்துவ நிபுனர்கள்தான் இந்த சிகிச்சையை
செய்கிறார்கள். எனவே, எத்தனை தடவை எண்டோஸ்கோபி செய்தாலும் பிரச்னை இல்லை.
உங்களுக்கு உள்ள வயிற்று எரிச்சல் பிரச்னைக்கு வேறு ஏதேனும் காரணமாக
இருக்கலாம். உடனே, மருத்துவரை அனுகுவது நல்லது.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யலாமா? அல்லது பிரச்னை எதுவும் வந்த பின்னர் பரிசோதனை செய்யவேண்டுமா?
வயிற்று சம்பந்தமாக ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டும் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்தால் போதுமானது.
எனக்கு வெளி மூலம் உள்ளது. இதுவரை எந்த சிகிச்சைக்கும் செல்லவில்லை. மலம் கழிப்பதிலும் சிக்கல் இல்லை. நான் கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்யவேண்டுமா?
வெளி மூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளே பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும். எனவே, கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
நான் வீட்டில் சிக்கன் சாப்பிட்ட நாட்களில் வயிறு எரிச்சல் ஏற்படுகிறது. காரணம் என்ன?
கோழி இறைச்சி பழையதாக இருக்கலாம். அல்லது எண்ணெய் அதிகமாக உபயோகித்து பொரித்திருக்கலாம். அல்லது காரம் அளவிற்கதிகமாக சேர்த்திருக்கலாம்.
நான் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட மறுநாள் வயிறு வலிக்கிறது. என்னிடம் கோளாறா? அல்லது ஓட்டல் உணவில் கோளாறா?
ஓட்டல் உணவில்தான் பிரச்னை. வீட்டில் சமைக்கும்போது சுத்தமாக சாதாரண உணவுப்பொருட்கள் மற்றும் அதனுடன் சேர்க்கும் பொருட்களும் எண்ணெய் வகைகளும் சாதாரணமானதாகவும் சுத்தமானதாகவும் இருக்கும். மற்றும் பக்குவமாகவும் சமைப்பார்கள். ஆனால் ஓட்டல்களில் சுவையை அதிகரிப்பதற்காக நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு வழக்கத்திற்கு மாறாக உணவுப்பொருட்களை உபயோகிக்கிறார்கள். எண்ணெய், வேதிப்பொருட்கள் கலந்த உணவுப்பொருட்கள், பழைய இறைச்சி, அளவிற்கதிகமான காரம் போன்றவற்றை உபயோகிப்பதால் நாவிற்கு நல்ல சுவையாக உள்ளது. அந்த பதார்த்தத்திற்கு சிறப்பான பெயர்களையும் சூட்டிவிடுகிறார்கள். ஆனால் வயிற்றிற்கோ ஆபத்தை விளைவிக்கிறது.
நான் காலை உணவுக்கு முன் குடிநீர் அரை லிட்டர் குடிக்கிறேன், பின்பு ஒரு லிட்டர், மதிய உணவுக்கு பின்னர் குடிப்பதில்லை. மீண்டும் காலையில்தான் குடிக்கிறேன். நான் குடிநீர் குடிக்கும்முறை சரிதானா?
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் தண்ணீர் அருந்துவது நல்லது. இரவில் உறங்குவதற்கு முன் தண்ணீரை அளவிற்கதிகமாக குடிப்பதால் சிறுநீர் கழிப்பதற்காக தூக்கம் கெட்டு எழுந்திருக்க நேரிடும்.
இரைப்பை கேன்சர் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்கும் வழிமுறைகள் உண்டா?
அதிகமான ஆல்கஹால், புகைப்பிடிக்கும் பழக்கம், அளவிற்கதிகமாக காரம், துரித உணவை உட்கொள்வதாலும் மற்றும் மரபணு மூலமாகவும் இரைப்பையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது.
நான் தினசரி காலையில் ஒரு கப் தயிர் கலந்து ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறேன். இது வயிறு, குடலுக்கு நல்லதா? இந்த உணவு முறையால் பாதிப்பு ஏதும் உண்டா?
தினசரி உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் கலந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது தயிர் சேர்த்துக்கொள்வதால் காரத்தை சரிகட்டிவிடும். எனவே, தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது.
எனக்கு வயது 16. கடந்த 2 ஆண்டுகளாக 2 மாதத்திற்கொருமுறை வாயில், நாக்கில் புண் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு பின்னர் தானாக சரியாகிறது. வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வரும் என்கிறார்கள் உண்மையா? இதற்கு சிகிச்சை என்ன?
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வர வாய்ப்புண்டு. மேலும், வைட்டமின் குறைபாடிருந்தாலும் வாயில் புண் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எண்டோஸ்கோபி மூலமாக வயிற்றை பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஒரு மருத்துவமனையில் 3 முறை எண்டோஸ்கோபி செய்தேன், அதன்பிறகு உள்ளே எரிச்சல் தெரிகிறது. இதற்கு காரணம் அடிக்கடி எண்டோஸ்கோபி செய்ததன் காரணமாகவா?
எண்டோஸ்கோபி கருவியானது மிகவும் மெல்லிய வளைந்துகொடுக்கக்கூடிய அமைப்பை கொண்டிருக்கும். இதனால் வயிற்றின் பக்கவாட்டில் கீறல் ஏற்படாது. மேலும் நன்கு பயிற்சிபெற்ற மருத்துவ நிபுனர்கள்தான் இந்த சிகிச்சையை செய்கிறார்கள். எனவே, எத்தனை தடவை எண்டோஸ்கோபி செய்தாலும் பிரச்னை இல்லை. உங்களுக்கு உள்ள வயிற்று எரிச்சல் பிரச்னைக்கு வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம். உடனே, மருத்துவரை அனுகுவது நல்லது.