சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:03 | Best Blogger Tips

நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக,
கண்பார்வை இழப்பு ஏற்படலாம்.

சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure)

மாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றலும் ( Amputation) நேரிடலாம்

மாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம்.
பக்க வாதம் வரலாம்.
போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
சர்க்கரை நோயை கண்டுபிடிப்பதர்க்கான பரிசோதனைகள்

உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்

1. சிறுநீர் பரிசோதனை

நீரிழிவைக் கண்டுபிடிக்கவும1 கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இரத்த குளுக்கோஸ் எந்த அளவிற்கு கூடி அல்லது குறைந்திருக்கிறது என அறியவும் முடியாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.

1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை

இவை செய்யப்படும் முறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லையேல் உங்கள் மருத்துவருடன் கலந்து லோசியுங்கள்.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180 mg/dl க்கு மேற் சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும். இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180 mg/dl க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும்.

எனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது. அதே போல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரது நிரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்திருப்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறிய முடியாது என்பது இதில் உள்ள முக்கிய குறைபாடு ஆகும்.
2. இரத்தப் பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்.
1. குளுக்கோமீட்டர் பரிசோதனை
2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் (Venous Blood)அளவிடல் பா¢சோதனை

குளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக் கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது.

குளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood).. இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வு கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை ெய்வார்கள்.

இதனால் குளுக்கோமீட்டாரில் செய்யும் போதும், மருத்துவ ஆய்வுகூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடு இருப்பது சர்வசாதாரணம். இச் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது.

முதன் முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுகூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood) போதுமானது.
 
 
நன்றி Karthikeyan Mathan