திருமண தடை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

எந்த ஒரு ஜாதகருக்கும் / ஜாதகிக்கும் - திருமண விஷயமாக பார்க்கும்போது - மூன்று வித தோஷங்கள் ஆராயப்படுகின்றன . சர்ப்ப தோஷம் . செவ்வாய் தோஷம் அடுத்து புனர்பூ.முதல் இரண்டு தோஷங்களும், எல்லா ஜோதிடர்களுக்கும் அத்துபடி.
அதனாலே , அந்த ரெண்டைப் பத்தி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.இப்பொழுது பார்க்கவிருப்பது புனர்பூ .

ஒரு சில ஜாதகர்களுக்கு - பொருத்தம் பார்க்கும்போது , கொஞ்சம் ஓரளவுக்கு பொருந்தி , பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே , திடீரென்று - பொருத்தம் பார்க்கப் பட்ட ஜாதகருக்கு , வேறு ஒரு இடத்தில் நல்ல வரன் வந்து , டக்குனு , முடிஞ்சு கல்யாணமே முடிந்து போகும்... கவனித்து இருக்கிறீர்களா ?

அது எல்லாமே .. இந்த புனர்பூ தோஷ வகையை சார்ந்தது... இந்த தோஷம் இருப்பவர்களுக்கு , பொருத்தம் பார்க்கும்போது - சம்பந்தப்பட்ட ஜாதகர் / ஜாதகிக்கு வேறு ஒரு நல்ல வரன் அமைந்து விடுகிறது.

சரி, இதை எப்படி ஜாதக ரீதியாக கண்டு பிடிப்பது ?

சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க - சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )

இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள்.

புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ?

(1 ) திருமணம் காலதாமதமாவது
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பரிகாரம் :

இந்த அமைப்பு இருப்பவர்கள் - திருமணஞ்சேரி சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.

குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும்.

களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
திருமண தடை;
---------------------