கல்லீரல் நமது வலது பக்க மார்பின் கீழே அமைந்துள்ளது. உடல்
உறுப்புகளிலில் இதுவே அதிக எடை உள்ளதாகும். நமது
இராஜ உறுப்பான கல்லீரல் உடலில் மிகப்பெரிய சுரப்பியுமாகும். இதனுள் பித்தநீரை
சுரக்கும் பித்தப்பையும், பித்தநீர் நாளங்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் நமது உடலின் சுத்திகரிப்பு நிலையமாக விளங்குகிறது. உணவில்
உள்ள ஸ்டார்ச் பொருளை சர்க்கரையாக மாற்றி சேமித்து
வைத்துக் கொள்கிறது.
கல்லீரல் உணவு உற்பத்தி கேந்திரமாக செயல்படுகிறது. இது சேமித்து
வைக்கும் குளுக்கோஸானது மூளையின் செயல்பாட்டுக்கு மிக
உதவியாக உள்ளது.
ஒரு காலத்தில்
கல்லீரல் நோயானது ஆண்களையே அதிகம் தாக்கியது..
இதற்கு காரணம்
அடிக்கடி நிறைய
#சிகரெட்டுகளையும்
குடிப்பதேயாகும்.
ஆனால் இக்காலத்தில் பெண்களையும் குழந்தைகளையும் இந்த நோய்
தாக்குகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் பால், உணவுகளில் உள்ள வேறுபாடுகளே காரணமாகும்.
மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்ய முடியாத அளவிற்கு கல்லீரல் வேலை
செய்கிறது. கல்லீரலானது மற்ற உறுப்புகளை காட்டிலும் மிக #மேன்மையாக
வேலை செய்கிறது.
மற்ற உறுப்புகளை காட்டிலும் இரு மடங்கு வேலைகளைச் செய்யும் திறன் படைத்தது
கல்லீரல்.
நாம் என்ன வகையான உணவுகள் சாப்பிட்டாலும்
இரைப்பையின் மூலம் நமக்குத் தேவையான சக்தியாக
மாற்றப்பட்டு முதலில் செல்லும் இடம் கல்லீரலே..
இந்த கல்லீரல்தான் உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் தேவையான வகையில்
மேலும் சத்துக்களை பிரித்து இரசாயன மாற்றம் செய்து இரத்தத்தின் மூலமாக அனுப்பி
வைக்கின்றது.
கல்லீரல் நமது உடலின் சேமிப்பு வங்கி
ஆகும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை உடனே
அனுப்பிவிட்டு, மீதமான சத்துக்களை தேக்கி வைத்துக்
கொள்ளும் இயல்புடையது.
ஒருவர் இரண்டு மூன்று நாட்கள் கூட உண்ணாமல் இருக்கும் போதும், உண்ணாவிரதம் போன்ற காரியங்களில் ஈடுபடும்போதும் இதுவே தன்னுள்
சேர்த்து வைத்த சத்துக்களை அனுப்பி அவரை சக்தி பெறச் செய்கிறது. கல்லிரல் ஒன்று
இல்லை என்றால் உண்ணாவிரத பந்தல்.... எல்லாம் பார்க்க முடியாது.
ஒரு மனிதனுக்கு இறப்பு ஏற்பட பெரிய அளவு
ஆபத்துக்கள் எல்லாம் தேவையில்லை. ஒரு சிறிய வெட்டுக்காயம் மட்டுமே போதும்...அவன்
ஆயுள் முடிய..
ஆம் நமது உடலில்
காயம் ஏதும் ஏற்பட்டால் இரத்தம் வெளியேறிக் கொண்டே தான்
இருக்கும். அந்த இரத்தத்தை உடனே நிப்பாட்டுவது கல்லீரலின் செயல்பாடுதான்.
இது அனுப்பும் புரோத்ரோம்பின் என்னும் இரசாயனத்தை மூலமே அந்த
இரத்தம் உடனே நிற்கும்.
கல்லீரல் மட்டும் இல்லையென்றால் மற்ற எந்த நோய் குறைபாடுகளுக்கும்
நாம் மருந்து எடுக்க முடியாது. ஏன் என்றால் நமது உடலுக்குத்
தேவையான அல்லது தேவையில்லாத எந்த ஒரு மருந்தையும் நாமாகவே எடுக்கும் போது அது நமது
உடலுக்குத் தேவையா, தேவையில்லையா என சரிபார்த்து
தேவையானதை மட்டும் அனுப்புவது கல்லீரலே.
இப்போது எல்லாம் மது குடிப்பது என்பது மனிதர்களிடையே மிக
சாதாரணமாகிவிட்டது. மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகரித்து
வந்துகொண்டே இருக்கிறது. எந்த நேரம் என காலம் நேரம் பார்க்காமல் மது குடித்துக்
கொண்டு தான் இருக்கிறோம். மது குடித்தால் மிகப் பாதிப்பு அடையக்கூடிய உறுப்பு
கல்லீரல் தான்.
ஏனெனில் கல்லீரல்தான் #மதுவுக்கு
எதிராக எந்த
நேரமும் போராடக்கூடிய ஒரு உறுப்பாக உள்ளது. இவர் மது அருந்தி இரவு
நேரத்தில் தூங்கும் போதும் மற்ற உறுப்புகள் எல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தாலும் இந்த
கல்லீரல் மட்டும் அவரை காப்பாற்ற இரவெல்லாம் ஓய்வெடுக்காமல் இரத்தத்தில் கலந்த
ஆல்கஹாலை பிரித்தெடுக்க போராடி அவரை
மதுவிலிருந்து காப்பாற்றுகிறது.
நாம் சாதாரணமாக உண்ணக்கூடிய உணவுப் பண்டங்களிலும் அதிகமான விஷம்
கலந்து உள்ளது. உதாரணமாக உணவுகளில் கலந்துள்ள நிறமூட்டிகள், சுவையூட்டிகளாலும் அதிகப்படியான ஆபத்துகள் உள்ளது.
இந்த விஷ
உணவுகளில் கலந்துள்ள விஷத்தை போக்க வில்லை என்றால் நாம் சாப்பிடும் உணவு ஒருபோதும்
செரிக்காது. எனவே உணவுப் பண்டத்திலுள்ள விஷங்களை எல்லாம் சுத்திகரித்து
அனுப்பினால் தான் உடலில் விஷம் ஏறாமல் இருக்கும் இந்த விஷங்களை எல்லாம்
சுத்திகரிக்கும் திறன் படைத்தது கல்லீரல்.
நமது உடலில் உள்ள #இராஜ
உறுப்புகளாகிய...
இதயம்,
சிறுநீரகம்,
மூளை,
நுரையீரல்
போன்றவைகளில் பிரச்சினைகள்
ஏற்படும்போது நமது கல்லீரல் மட்டும் போதுமான அளவு பலமாக இருந்தால்....
அந்த
பிரச்சனையிலிருந்து எளிதாக நாம் மீள முடியும். கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால்
அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவது மிக கடினமாக இருக்கும்.
கல்லீரலை மருத்துவர்கள் கழுதைக்கு ஒப்பாக
சொல்வார்கள். ஏனெனில் கழுதை ஆனது பொதி சுமக்கும் போது எவ்வளவு சுமை ஆனாலும்
சுமக்கும். ஆனால் கழுதை படுத்துக்கொண்டால் என்ன செய்தாலும்
அது எந்திரிக்காது.
கல்லீரலும் அது போலத்தான் நாம்
எவ்வளவு கெட்ட உணவுகள் உண்டாலும், அளவுக்கு அதிகமான இரசாயன
மாத்திரைகள் உண்டாலும், மது, போதை வஸ்துக்கள் போன்றவைகள் எடுத்துக்கொண்டாலும், அதில் இருந்து நம்மை காக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டு நன்கு
உழைத்து கெட்ட விஷயங்களில் இருந்து நம்மை காப்பாற்ற கல்லீரல்தான் இருக்கு.... இது
நம்மை எப்படியும் காப்பாற்றும் என்று நாம் மேலும், மேலும் கல்லீரலுக்கு அடிமேல் அடி கொடுத்துக்கொண்டு இருந்தால் கழுதை போலவே செயல்
பட்டு பின்பு அடி தாங்காமல், வேலை ஏதும் செய்யாமல்
படுத்துவிடும்.
கல்லீரலின் செயல்பாடு ஆனது இதயத்திற்கும் மூளைக்கும்
தொடர்புடையனவாக நரம்புகளின் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே கல்லீரல் பழுதானால் இதயம், மூளை பழுதாகும். கடைசியில் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை
செய்யாமல் படுத்துவிடும்.
கல்லீரலைத் தாக்கும் முக்கிய நோய்கள்
1)கல்லீரல் இணைப்பு திசுக்கள் மிக
அதிகமாகி விடுவதால் கல்போல் இறுகி கடினமாகி விடுதல்.
2)பல்வேறு குளறுபடிகளால் கல்லீரல்
தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு கொண்டே வந்து செயலிழந்து விடுதல்.
3) கல்லீரல் நாளங்களில் அதிக ரத்தம்
அழுத்தம் ஏற்படுதல்.
4)கல்லீரல் சிறுத்து சுருக்கம்
ஏற்படுதல்.
5)கல்லீரல் மிருதுவாகி
பெருத்துவிடுதல்.
6)கல்லீரலில் கட்டிகள் உருவாகி சீழ்
பிடித்துவிடுதல்.
7)கல்லீரலில் அதிகப்படியான உபாதைகள்
ஏற்பட்டு புற்றுநோய் வருதல்.
இவ்வளவு #சிறப்புமிக்க
கல்லீரலை நல்ல
பழக்க வழக்கங்களை கடைபிடித்து வாழ்ந்தால்... மற்ற
உறுப்புகளுக்கு குறை ஏதும் ஏற்படாமல் #பாதுகாத்து
நம்மளை நீண்டநாள்
நன்கு ஆரோக்கியமாக வாழ செய்யும்.
கல்லீரலுக்கு
சிறந்த மருத்துவம் எதுவெனில் இயற்கையை விரும்பும் #சித்த_மருத்துவமே
சிறந்ததாகும் .
ஆம் சித்த மருத்துவமே பக்க விளைவுகள்
அற்ற சிறந்த மருத்துவம் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.!
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்
நன்றி
Vedha Mani
இணையம்