_தை_மாத #கடைசி_வெள்ளிக்கிழமை #திருஷ்டி_கழிக்க_மறவாதீர்கள்.*
இன்பத்திலும், துன்பத்திலும் நமக்கு நல்லனவற்றை எல்லாம் வழங்குவதில் வழிபாடுகளும், பூஜைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
*தை வெள்ளி விரதம்
தை மாத
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நல்ல நாளாகும். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமையில்
விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், செல்வ வளம் பெருகும். எத்தனை
வெள்ளிக்கிழமை வந்தாலும், தை வெள்ளிக்கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. இந்த இரண்டு
மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வர வேண்டும்.
வடக்கு நோக்கிய
அம்பிகையை வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். இன்னல்கள் விலகும். போராட்ட நிலைகள்
மாறி, வாழ்வில் புதிய திருப்பங்கள் தோன்றும்.
தெற்கு நோக்கிய
அம்பிகையை வழிபட்டால் செல்வநிலை மேம்படும். செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்.
ஆகவேதான் அள்ளித்
தரும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையை, உத்தராயண காலமாகிய தை மாதத்தில்
தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை
நாட்களில் அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை கலி வெண்பா, சௌந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அம்மைப் பதிகம் முதலியவற்றில் ஏதாவது ஒன்றைப் பாராயணம்
செய்வது நன்மையை அளிக்கும்.
*தை வெள்ளி திருஷ்டி சுற்றுதல்
தை மாதத்தில், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும்
திருஷ்டி சுற்றிப் போடவேண்டும்.
வெள்ளிக்கிழமையில், மாலையில் விளக்கேற்றியதும், சூரியன் மறைந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரையும் வீட்டின் நடுவே அமரவைத்து திருஷ்டி
சுற்றிப் போடவேண்டும். திருஷ்டி கழிக்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு
பார்த்து அல்லது வீட்டின் வாசலைப் பார்த்து அமர வேண்டும்.
பூசணிக்காய், எலுமிச்சை மற்றும் தேங்காய் இவற்றை கொண்டும் சுற்றிப் போடுவது மிக
மிக நல்லது மற்றும் வலிமை மிக்கது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
நன்றி இணையம்