மலையீஸ்வரன் திருக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 PM | Best Blogger Tips

 


தைப்பூசம் அன்று பராசர முனிவருக்கு நாகையில் கிடைக்கப்பெற்ற கைலாய_தரிசனம்.

அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில்,

நாகப்பட்டினம்.

ஸ்தல வரலாறு

இறைவனைப் பல்வேறு தலங்களில் காணும்படி யாத்திரையாக நாகைக்கு வந்த வேத வியாசரின் தந்தையான பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது.

எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார்.

அதன் பயனாக தைப்பூசம் நன்னாளில் சிவபெருமானின் கைலாய தரிசனம் கண்டு, கல்ப காலம் வரை நித்தியத்துவம் பெரும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.

 நன்றி இணையம்