*உணவுமுறை பற்றி*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:22 PM | Best Blogger Tips

 



நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான்.

உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக் கண்டு பிடிக்கவே முடியாது.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

மனிதனுக்குப் பைத்தியம். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.

கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்..

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள். அந்த மிருகத்திற்கு என்னவாகிறது. அது கொல்லப்படும்போது? யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது. விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை. உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாகமாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொள்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

#அதன்_உடல்முழுவதும்_வன்முறை, #வேதனை_மரணஓலம்_பரவும்.

#அந்த_உடல்_முழுவதுமே_கழிவுகள்_விஷம்.

உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது. காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள். அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் இருக்கிறது. அந்த முழு சக்தியுமே விஷம்தான். பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது. அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது. நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை.

பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள்.

அதில் அழகு என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது.

எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

ஓஷோ💙

(மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 229 & 230)

 

நன்றி இணையம்