மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:59 | Best Blogger Tips

 


ஆணவம் தவிர்ப்போமா..??*

என்னால மட்டுந்தாங்க இதை செய்யமுடியும் ன்னு நெனைச்சிக்கிட்டு வீணா யாரும் தற்பெருமை பேசக்கூடாதுங்க....

பேசறதுமட்டுமில்லங்க.... நெனைக்கக்கூட கூடாதுங்க.....

இந்தத் தலைக்கனம் யாருக்குமே இருக்கக்கூடாதுங்க,,,

அதத்தாங்க நம்ம ஔவை பிராட்டியார் நாம தெரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பாட்டுல சொல்றாங்க பாருங்க..

*ஔவையார் பாடல்....*

வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.

கீழ்பக்கம் வாசல் இருந்தும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தூக்கணாங் குருவிக் கூடு,

மண்ணைக்கொண்டே தன் வீட்டைக் கட்டும் கறையான் புற்று,

அந்தரத்தில் தேனை சேகரிக்கிற தேன்கூடு,

தன் உணவை தன்னிடம் தேடிவரச் செய்கிற சிலந்திவலை ஆகியவற்றை எல்லோராலும் உருவாக்க முடியாது,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல் எளிதானதாக இருக்கும்.

எனவே என்னால் மட்டுமே முடியும் என எவரும் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது.

ஔவையின் அறிவுரையை ஏற்று நல்லெண்ணங்களை நாமும் வளர்த்துக் கொள்வோம்.

*கொஞ்சம் யோசிங்க.

 

 நன்றி இணையம்