மருந்தைவிட நம்பிக்கையே சிறந்தது...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips

 



பி.எம். எக்டே (B. M. Hegde) என்பவர் மருத்துவராகவும் ஆசிரியராகவும் நூலாசிரியராகாவும் விளங்குபவர்.மருத்துவத் துறையில் புதிய சிந்தனைகளைக் கொண்டவர்.மணிப்பால் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்து ஒய்வு பெற்றவர்.தேசிய அளவிலும் உலக அளவிலும் பல விருதுகளைப் பெற்றவர். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் அறிவிக்கப்பட்டு நவம்பர் மாதம் விருது வழங்கப்பட்டது.[1]

இருதய அடைப்பு சிகிச்சை முறைகள் .

அத்தனையும்

களவாணித்தனம் சொல்பவர் டாக்டர் ஹெக்டே .

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது

இருதயத்தின்

ஆயுளை நீடிக்கும் என்றும் பைபாஸ்,

ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும்

களவாணித்தனம்

என்கிறார் பிரபல இருதய மருத்துவ நிபுணர் ஹெக்டே.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு

இருதய

மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர்.

மருத்துவர் தவிர அவர் சிறந்த

கல்வியாளரும்

மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் இருதயத்தில் அடைப்பு இருந்தால்

தயவு செய்து

அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம்.

Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி

மூலமும்

பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு

தனக்குத்தானே

வேற ஒரு பாதையை கண்டுபிடித்து

ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறதாம்.

இயற்கை நமக்கு கொடுத்த

வரம் அது என்கிறார் ஹெக்டே.

ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு

நன்மையை

தான் தரும் என கூறும் அவர் அதிகாலையில் எழுந்து வெற்று வயிற்றுடன் உடற்பயிற்சி செய்வதும்,

பிரணாயமமும் இதய அடைப்பை இயற்கையாகவே அகற்றம் என்கிறார்."

இருதய அடைப்பை நீக்குவதை விட

அதை

அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்கிறார் ஹெக்டே.

ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும்

என்றும்

பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் வர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணியசுவாமி

தம்மிடம்,

இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்ததாகவும் அதற்கு டாக்டர்,

அதெல்லாம் தேவையில்லை போங்க, என்று கூறியவுடன் சுப்ரமணியன் சுவாமி

கோபமடைந்து

டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று

எதை

கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான்.

அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான

மருந்து

கிடைத்து விட்டது என நினைத்து சமாதானமடைந்து,

டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில்

நோய் குணமாக ,

மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது என டாக்டர் ஹெக்டே தெளிவாக தெரிவித்தார்.

 


நன்றி இணையம்