★ ஓம் அகத்திய ர் பாதம் பாேற்றி ★

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:55 | Best Blogger Tips


பிராணன் என்றால் மூச்சு அல்ல. பிராணவாயுவுமல்ல. பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துவது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் பிராணன் என்றால் மூச்சு அல்ல. பிராணவாயுவுமல்ல. ஆனால் பிராண வாயுவின் மூலம் பெறக் கூடிய சக்தி அது. சுவாசத்தைத் தூண்டுவதும், அந்த சுவாசத்திற்குள் சக்தியாக இருப்பதுவும் பிராண சக்தியே.
. சில நூல்களில் இந்திரியங்களையும், மனதையும் கூட பிராணன் என்று சொல்வதுண்டு. எது செயல்களின் மூலம் தோற்றத்திற்கு வருகிறதோ அதை சக்தி என்போம். ஆனால், பிராணனோ செயலாக பரிணமிக்காமல் அடிப்படை மூலசக்தியாகத் திகழ்கிறது. இந்த உடலில் மட்டுமல்ல உலகில் கணப்படுபவை எல்லாம், இயங்குகிற எல்லாம் பிராணனின் சக்தியாலேயே இயங்குகின்றன.
எனவே பிராணன் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஆதாரசக்தியின் பொதுப் பெயர். பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்களின் தொகை பிராணன் எனப்படுகிறது.
பிரளய காலத்தில் ஒடுங்கியிருக்கிறது. சிருஷ்டியின் போது இயக்கத்துக்கு வருகிறது. உயிர்களின் நாடி, நரம்புகளிலெல்லாம் செயலாகத் திகழ்வது பிராணனே. எண்ணமாக வடிவெடுப்பதுவும் பிராணனே. அப்படியானால் இதுவே ஆதார சக்தியாக இருக்கும் போது, இது எதில் போய் ஒடுங்குகிறது ? என்ற கேள்வி எழும். அது ப்ரம்மத்தில் . ோய் ஒடுங்குகிறது.
சிருஷ்டி காலத்தில் அந்த ப்ரம்மத்தின் சலிப்பில் எண்ணமாய் வெளிப்படும் ஆதி சக்தியே சிவனாகவும், சக்தியாகவும் வெளிப்படுகிறது. சிவன் என்பது ஸ்தூல வடிவத்தின் வித்து, சக்தி என்பது சூக்கும சக்தியின் வித்து. இந்த இரு பெரும் சக்திகளின் சேர்க்கையே இந்தப் பிரபஞ்சம். இந்த சிவமாகிய ஆகாசத்தோடு பிராணனாகிய சக்தியின் கூட்டுறவால் வந்ததே இந்தப் பிரபஞ்சம். நம் மானிட சரீரமும் அப்படி வந்ததே. நாம் நுகருகின்ற மற்ற பூதங்களும் ஆகாசத்திலிருந்து வந்தவையே. அவற்றின் தன்மாத்திரையான சூக்கும சக்தியாக பிராணன் திகழ்கிறது.
இந்த சிவசக்தி ஐக்கியமாகி ப்ரம்மத்திலிருந்து வெளிவந்த நிலையையே பெண்ணாக உருவகப்படுத்தி ஆதிபராசக்தி என்று வணங்குவார்கள்.
இப்படிப்பட்ட சூக்கும, ஆதார மூல சக்தியாகத் திகழும் பிராண சக்தியைக் நம் உடலுக்குள் நிலை நிறுத்திக் கையாளுவதையே பிராணாயாமம் என்கிறோம். இதனால் நம் தூல சரீரமும், சூக்கும சரீரமும் பலப்படும். இந்த பிராணனே மனமாக விளங்குவதால் மனோசக்திகள் பெருகும். எனவே மனம் சலனமடையாமல் எளிதில் வசப்பட்டு ஒருநிலைப் பாங்கு வாய்க்கும். யோக சாஸ்திரம் அருளிய பதஞ்சலி முனிவர் இந்த பிராணாயாமத்தை வெகு சிறப்பாகச் சொல்லவில்லை.
சிறிதளவு பழகினால் போதும் என்கிற அளவே அவர் சொல்லியிருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த சித்தர்களே பிராணாயாமம் குறித்து பல விவரங்களைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். இந்த பிராண சக்தியை நம் தேகத்தில் நிலைநிறுத்தப் பழகும் போது நம் சிந்தனாசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி மூன்றும் நன்கு செயலாற்றுகின்றன. நம் சித்தமானது பிராணனை ஏற்றுக் கொண்டு பல்வேறு சக்திகளாக அதை மாற்றுகிறது.
எனவே உடலை அழியாமல் காக்க முடிகிறது. பிராணசக்தியின் மூலம் உடலின் பல்வேறு இயக்கங்களையும், நாடி நரம்புகளையும் நாம் வசப்படுத்தலாம். இதையே சித்திகள் என்கிறோம்.
பிராணாயாமம் மூன்று நிலைகளாக செய்யப்படுகிறது. முதலில் பூரகம். பூரகம் என்றால் காற்றை உள்ளே இழுத்தல் என்று பொருள். பூரணமாக காற்றை இழுக்கும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவதே நோய்நொடிகளுக்கும், ஆயுள் குறைவிற்கும் காரணமாகி விடுகிறது.
தொடர்ந்து குனிந்து அமர்வதே நம்முடைய சுவாசத்திற்குத் தடையாக இருக்கிறது. அடிக்கடி, பெருமூச்சு, கொட்டாவி வருவதற்குக் காரணம் பிராண சக்தியின் பற்றாக் குறையே. குனிந்து இரையெடுக்கும் கோழி கூட அடிக்கடி நிமிர்ந்து தன் சிறகுகளை அடித்து உடலைத் தளர்த்தி இழுத்து நீளமாகச் சுவாசித்துப் பிராண சக்தியின் குறைபாட்டைப் போக்கிக் கொள்ளும். பூரகமே பூரண காற்றை இழுத்து நம் நுரையீரலின் இயங்காதப் பகுதிகளையும் இயங்கிடச் செய்கிறது.
அடுத்து இரேசகம் என்பது நிதானமாகக் காற்றை வெளியே விடுவதாகும். துருத்தியில் புஸ் புஸ் என்று காற்றை வேகமாக வெளியே தள்ளுவது போலத் தள்ளினால் யாதொரு பயனுமில்லை. நிதானமாக வெளியே விடும் போதுதான் நாடிகள் சுத்தமடையும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையே கும்பகம். சித்தர்கள் பல அதிசய சித்திகளை இந்தக் கும்பக நிலையில்தான் அடைந்தார்கள். அவர்கள் பூரகத்தை அதிகரித்து இரேசகத்தை குறைத்து, கும்பக நிலையில் நீண்ட நேரம் நிலைத்திருப்பார்கள். இந்நிலையில் இழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராண சக்தி முழுவதையும் பெற்றுக் கொள்வதால் அளவிட முடியாத பேராற்றல் உருவாகும். இதில் இலக்கை எட்டும் வரை பிரம்மச்சரியம் காப்பது அவசியம்.
பிராண சக்தியின் திணிவு ஏற்படும் போது மூளையிலுள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. மூளை தெளிவடைந்து புத்துணர்ச்சி பெறுவதால் மனம் ஒரு நிலைப்பட்டு ஒரு நிலையில் குவிந்து நிற்பது எளிதாகிறது. கண்கள் பிரகாசிக்கும். பார்வைக் குறைபாடுகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். காச நோய், ஆஸ்துமா , நிமோனியா போன்ற நோய்கள் விலகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
நம் முன்னோர்கள் நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். அப்படிச் செல்லும் போது நிமிர்ந்து நடப்பார்கள்
அதுபோல அவர்கள் அமரும் போதும் நிமிர்ந்துதான் அமர்வார்கள். இதனால் முதுகெலும்பு வளையாமல் அதற்கு முன்னால் அமைந்திருக்கும் நுரையீரலும் நீளவாக்கில் இழுக்கப்பட்டு அதிலுள்ள இலட்சக் கணக்கான காற்று நுண்ணறைகளும் விரிவடைந்து பிராண வாயு அந்த அறைகளுக்குள் செல்ல ஏதுவாகிறது. இதனால் நுரையீரலின் செயல் திறன் கூடுகிறது. எனவே குனிந்து அமர்வது, கூன் விழுந்த நடை, தொய்வாக அமர்வது, சுருண்டு படுப்பது இவற்றையல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இவற்றால் நாம் பூரண சுவாசத்தைப் பெற முடியாமல் போய் விடுகிறது. இந்த பிராண சக்தி உலகமெல்லாம் பரவி நின்றாலும், பிராண வாயு நம் பூமியில் மட்டுமே இருக்கிறது.
எனவேதான் இங்கே ஜீவராசிகள் தோன்றி வாழ்கின்றன. ஏனென்றால் சுவாசத்தின் மூலம் நாம் பிராண சக்தியை பெற்றுக் கொள்வதோடு பிராண வாயு நம் உடலில் பத்து விதமாகப் பிரிந்து செயலாற்றி நம் உயிரைப் பாதுகாக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பிராண சக்தி உடலில் அதிகரிக்கும் போது ஏற்படும் உஷ்ணமே
குண்டலினியைக் கிளப்புவதற்கும், சுழுமுனை நாடி திறப்பதற்கும் காரணமாக அமைகிறது.

நன்றி இணையம்