இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 AM | Best Blogger Tips



1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் 1000 வகையான மாம்பழ வகைகள் இருக்கின்றன.
வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடைப்பதும் இல்லை.
விளைவிக்கப்படுவதும் இல்லை.
6 கால நிலைகள் கோடை பருவமழை, கோடை, குளிர் பருவமழை, குளிர்காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகின்றன.
அதிக மசூதிகள் இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான்.
உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சோம்நாத் கோவில் சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடையே எந்த நிலப்பரப்பும் கிடையாது.
உலகின் முதல் பல்கலைகழகம் பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலைகழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம்.
இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 60வது பாடப் பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் கோவில் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள நடைப்பாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைப்பாதை ஆகும்.
4000 அடி நீளம் கொண்ட இந்த நடைப்பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன.
முதல் கண் அறுவைசிகிச்சை கண் மாற்று அறுவைசிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.
அரபிக் எண்கள் அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான்.
மருத்துவத்தின் தந்தை 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயுர்வேதா தான் முதல் மருத்துவ முறையாகும்.
சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார்.
அதனால், மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.
உலகின் பெரிய தபால் துறை இந்தியாவில் மொத்தம் 1,50,000 அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன.
உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.
வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான்.
மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுப்பிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.
உலகின் பணக்கார கோவில் உலகின் பணக்கார கோவில் எனும் பெருமை பத்மனாபசுவாமி கோவிலையே சேரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.
 நன்றி இணையம்