10 செகண்ட் கதைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 PM | Best Blogger Tips
10 செகண்ட் கதைகள் க்கான பட முடிவு10 செகண்ட் கதைகள் க்கான பட முடிவு
10 செகண்ட் கதைகள்
--------------------
*
ஸீட்*
..........
தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
=============
*தமிழன்டா*
....................
சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
===============
*திருட்டு*
...............
"
பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
===============
*பணம்*
..............
பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
=============
*பழ(ங்)கதை*
........................ "
தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் செல்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார் தன் சகோதரன் மீது தகராறு என காவல்நிலையத்தில் நின்றிருந்த தந்தை!
===============
*அக்கறை*
கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
===============
*விதி*
...........
"
துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!