தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த  சூப்பர் ஸ்பாட்

ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது  வெறும் கடற்கரை..

ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த  மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள்  நம் முன்னோர்கள்.

கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..

ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய 13 சுவாரஸ்யமான இடங்கள் | Housing News
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..

ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.

​ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.


​இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!
 அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.

தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்

 ராமேஸ்வரம் கடல் அலைகளே இல்லாமல் குளம் போல அமைதியாக இருப்பதுதான் இதற்குப் பெரிய உதவியாக இருந்தது.

​அலைகள் அதிகமாக இருந்தால் படகு ஆடும், கல் கீழே விழுந்துவிடும்.
​ஆனால் அமைதியான கடல் என்பதால், டன் கணக்கிலான பாரத்தை ஏற்றிய படகுகள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிதானமாகத் தீவை அடைய முடிந்தது.

கரையை அடைந்த கற்களை, பல நூறு யானைகள் மற்றும் காளைகளைக் கொண்டு இழுத்து வந்தனர். உயரமான இடங்களுக்குக் கற்களைக் கொண்டு செல்ல, , மண் சரிவுப் பாதைகளை (Earth Ramps) அமைப்பார்கள்.

 அதாவது, கோவிலின் உயரம் வளர வளர, மண்ணைக் கொட்டி ஒரு பெரிய மேடு போலச் செய்து, அதன் வழியாக யானைகளை வைத்து கற்களை மேலே தள்ளிக் கொண்டு செல்வார்கள். கோவில் கட்டி முடித்ததும் அந்த மண் அகற்றப்படும்.

ராமேஸ்வரம் கோயிலின் அஸ்திவாரம் என்பது 'மிதக்கும் அஸ்திவாரம்'
 
 நம் முன்னோர்கள் "சாண்ட்விச்' முறையைப் பயன்படுத்தினார்கள்..
முதலில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மணலைத் தோண்டி, அங்கே நீர் ஊற்றி நிறைய யானைகளை விட்டு நடக்கச் செய்வார்கள். யானையின்  கால் படும்போது அந்த இடத்தின் மணல் பல டன் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் மணலுக்கு இடையில் உள்ள காற்று வெளியேறி, அது பாறை போல இறுகிவிடும்.

அதன் மேல் கருங்கற்களை அடுக்குவதற்கு முன் கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து ஒரு 'பேஸ்ட்' போலச் செய்து இடையில் பூசினார்கள். இது காலப்போக்கில் கல்லை விடவும் வலிமையான ஒன்றாக மாறிவிடும்.இதற்குப் பிறகுதான் கற்களை அடுக்கத் தொடங்கினார்கள். இது நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது.

மணல் என்பதால் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் கோயில் சாய்ந்துவிடும். எனவே, மேற்கூரையின் எடையைத் தூண்கள் தாங்கும்போது, அந்தப் பாரத்தை மணலுக்குக் கடத்தாமல் தரைப்பகுதியில் பிரம்மாண்டமான 'தளவரிசை கற்களை' (Paving stones) விரித்தார்கள். இது பாரத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்தது.

ராமேஸ்வரத்தின் 3-வது பிரகாரம் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 1212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 20 இருந்து30 டன் எடை கொண்டது..

 உலகிலேயே மிக நீளமான அந்தப் பிரகாரத்தின் தூண்கள் அனைத்தும் துல்லியமான சமச்சீர் நிலையில் உள்ளன. ஒரு முனையில் நின்று பார்த்தால், அனைத்துத் தூண்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இத்தனை ஆயிரம் டன் பாரம் கீழே இருக்கும் மணலை அழுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தூணின் அடியிலும் மிகப்பெரிய கல் பலகைகளை விரித்து எடையைச் சமமாகப் பரப்பினார்கள் (Weight Distribution).

​​இந்தத் தூண்களை நிலைநிறுத்த 'Lock and Key' முறை எனப்படும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் முறையைப் பயன்படுத்தினார்கள்.

 நம் முன்னோர்களின் ஆழ்ந்த அறிவு நுட்பம் பிரமிக்க வைக்கும் 

"ராமேஸ்வரம் கோவில்  ஆன்மீக இடம் மட்டுமல்ல.. அது, ஒரு 'அறிவியல் கூடம்..

நம் தமிழ் முன்னோர்கள் மணலில் மலை போன்ற கோயிலைக் கட்டி, அதன் நிழலில் உலகையே வியக்க வைத்துள்ளான். 

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷