தாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசு

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips

Photo: தாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசு

தாயின் குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும், கருவிலேயே, வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும் என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.

வளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே.தாயின் குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும், கருவிலேயே, வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும் என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.

ளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே.

Via  ஆரோக்கியமான வாழ்வு