நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலே சொன்ன பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தாலும், பலரும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதே பிரச்சனைகள் நீண்ட காலம் நீடித்து வந்தால் அவை கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அல்சர் என்ற வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஒருசில நேரத்தில் வயிறு முழுவதையும் பாதித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்த்து சிறந்த முறையில் உணவுகள் செரிமானமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
--------------------------------------------------------------------------------------------------------

வெதுவெதுப்பான தண்ணீர் உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்
---------------------------------------------------------------------------------------------------------


















