ஹரிச்சந்திரன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:00 | Best Blogger Tips
ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை விதமான துன்பங்கள் இருக்கின்றன...எவ்வ்ளவு சோதனைகள் இருக்கின்றன..என்பதை சொல்லி...அத்தயக துன்பத்திலும் எப்படி மன வைராக்கியத்துடன் வாழ முடியும் என்பதை சொல்லும் கதைதான் அரிச்சந்திரன் கதை..பல கிராமங்களில் முன்பெல்லாம் இதை நாடகமாக நடிப்பார்கள்..அரிச்சந்திரனே இந்த பாடுபட்ருக்கான் நாம எம்மாத்திரம் என பேசிக்கொள்வார்கள்..இந்த நேரத்திலாவது இவன் பொய் பேச வேண்டியதுதானேன்னு நமக்கு எரிச்சல் வரும் கட்டம் நிறைய..மனைவி இழந்து,குழந்தை இழந்து,போராடுவார்..ஒரு கட்டத்தில் அவர் குழந்தை இறந்துவிடும்..அவர் மனைவி சுடுகாட்டுக்கு எடுத்து வருவார்...வெட்டியானாக அரிச்சந்திரன்...தன் குழந்தை என்று தெரிந்தும்,இங்கு பிணத்தை எரிக்கனும்னா பணம் கட்டனும்மா என சொல்வார் என்னிடம் பணம் இல்லைன்னு அந்தம்மா கதறும்...அவர் மனமிரங்காமல் என் கடமையை செய்ய கூலி கொடுக்கனும் அது ஊர் தலைவர் உத்தரவு என்பார் இந்த கட்டத்தில் ஊரில் இருக்கும் பெண்கள்,ஆண்கள் எல்லோரும் கதறி அழுதுவிடுவார்கள்...எங்க ஊர் கிராமத்து நாடகம் நடக்கும்போது சின்ன வயசுல பார்த்தது..அவரின் உண்மை மட்டும் பேசி வாழ்வது எனும் வைராக்கியம் அசர வைக்கும்..!! பல பிறவி துன்பத்தையும் இந்த பிறவியிலேயே அனுபவித்து அறுத்தெரியும் நோக்கோடு அவராக பல பிறவி துன்பத்தையும் இப்பிறவியிலேயே வழங்கிவிடு என வரம் கேட்டு வாங்கி பிறந்தவராம்...அதனால் இத்தனை துன்பத்தையும் அனுபவித்தாராம் ஹரிச்சந்திர மகராஜா!!