"இதை (பாலியலை) விற்பனை செய்யக்கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வதுதான் நல்லது"
நளினி ஜமீலா எழுதிய "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" புத்தகத்தை மிக அண்மையில்தான் வாசித்தேன்.
எந்தவொரு பெண்ணும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இலட்சியமாக்கிக்
கொள்வதில்லை. நளீனா ஜமீலா சிறுபராயம் முதல் கொண்டு பாலியல் தொழிலாளி நிலை
வரைக்குமான வாழ்வை சுயசரிதையை அப்பலுக்கில்லாமல் தந்திருப்பதிலிருந்து
சமூகத்தின் கபடத்தனங்களும் முக்கியமாக சில ஆண்களின் அருவருத்த தோற்றங்களும்
ஒழுக்கத்தின் பொருள்கோடல்களில் சேற்றை வீசுகிறது. ஆண்கள் எப்படியெல்லாம்
எத்தகைய காரணங்களுக்காகவெல்லாம் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச்
செல்கிறார்கள் என்பதை நளினி ஜெமீலா விபரித்திருப்பதைப் படிக்கும்போது
ஆண்களில் அதிகம்பேருக்கு இருக்கின்ற உளவியல் பிரச்சினைகள் அதிகார
சிக்கல்கள் அதிலும் பெண்களை அடக்கியாள்வதிலும் அது முடியாதபோது உண்டாகிற
பைத்திய நிலைகளும் வியப்பளிக்கிறது.
நளினியாக இருந்த பாலியல்
தொழிலாளி ஜமீலாவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ஷாகுலுடன் அவர்
ஐக்கியமானதும் அர்ப்பணிப்பு நிறைந்ததுமான வாழ்வை வாழ்கிறார். அவரது இன்ப
துன்பங்களில் பங்கு கொள்கிறார். பாலியல் தொழிலிருந்து முற்றிலும் விடுபட்டு
குடும்பப் பெண்ணாக பொறுப்புடன் செயற்படுகிறார். ஷாகுலின் பொருளாதார
நெருக்கடிகளின்போதும் தோள்நின்று உழைத்துப் பாடுபடுகிறார். பத்து
வருடங்களுக்கும் மேல் இந்த வாழ்க்கை நீடிக்கிறது. வேறொரு பெண்ணுடன் தொடர்பு
ஏற்பட்டதும் ஷாகுல் மிக எளிதாக ஜமீலாவிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்.
புறக்கணிக்கிறார்.
பள்ளிவாயல்களில் குந்தியிருந்து
பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்ட பின்னரும் ஆண்கள் பலர் இரண்டாவதாக
மூன்றாவது அல்லது நான்காம் மனைவியாக்கிக் கொள்வதிலேயே கவனமாக
இருக்கின்றனர். இளம் வயது மகளின் பாதுகாப்புக்காக நளின ஜமீலா ஓடுவது
உண்மையில் துயரானது.
நளினி ஜெமீலா பாலியல் தொழிலுக்கு மீண்டும்
மீண்டுமாகத் தள்ளப்படுவதற்குப் பின்னால் ஆண்களின் ஆசைகள் துரோகங்கள்
ஏமாற்றங்கள் மட்டுமே உள்ளது. ஷாகுலுடன் அவர் அச்சுக்கோர்ப்புப் பணியில்
ஈடுபட்டதிலிருந்தும் பாலியல் தொழிலாளியாகுவதற்கு முன்பு பல்வேறு கடினமான
பணிகளில் ஈடுபட்டுள்ளதிலிருந்தும் அவர் கடுமையான உழைப்பாளியாக
அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் வேலைபார்க்கும் பெண்களிடம் முதலாளி
ஆண்களினதும் ஏனையவர்களினதும் அர்த்தமற்ற பெண்ணின் உடலை மையப்படுத்திய
எதிர்பார்ப்புகளும் வருத்தமளிக்கின்றன.
நளீனி ஜமீலா சுயசரிதையில்
கூறியிருக்கும் ஒரு கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்."இதை
(பாலியலை) விற்பனை செய்யக்கூடாது என்று சொல்வதைவிட தேவைப்படாதவர்கள் வாங்க
வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வதுதான் நல்லது"
பாலியல்
தொழிலாளிகளின் வாழ்வை குடும்பம் வேறு தொழில்களின் மூலமாக சீரமைப்பதாக
பேசப்படுபவவை எல்லாம் வெற்று விவாதங்கள் வீணான முயற்சிகள்.
Via Aatika Ashreen
"இதை (பாலியலை) விற்பனை செய்யக்கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வதுதான் நல்லது"
நளினி ஜமீலா எழுதிய "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" புத்தகத்தை மிக அண்மையில்தான் வாசித்தேன்.
எந்தவொரு பெண்ணும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இலட்சியமாக்கிக் கொள்வதில்லை. நளீனா ஜமீலா சிறுபராயம் முதல் கொண்டு பாலியல் தொழிலாளி நிலை வரைக்குமான வாழ்வை சுயசரிதையை அப்பலுக்கில்லாமல் தந்திருப்பதிலிருந்து சமூகத்தின் கபடத்தனங்களும் முக்கியமாக சில ஆண்களின் அருவருத்த தோற்றங்களும் ஒழுக்கத்தின் பொருள்கோடல்களில் சேற்றை வீசுகிறது. ஆண்கள் எப்படியெல்லாம் எத்தகைய காரணங்களுக்காகவெல்லாம் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்கிறார்கள் என்பதை நளினி ஜெமீலா விபரித்திருப்பதைப் படிக்கும்போது ஆண்களில் அதிகம்பேருக்கு இருக்கின்ற உளவியல் பிரச்சினைகள் அதிகார சிக்கல்கள் அதிலும் பெண்களை அடக்கியாள்வதிலும் அது முடியாதபோது உண்டாகிற பைத்திய நிலைகளும் வியப்பளிக்கிறது.
நளினியாக இருந்த பாலியல் தொழிலாளி ஜமீலாவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ஷாகுலுடன் அவர் ஐக்கியமானதும் அர்ப்பணிப்பு நிறைந்ததுமான வாழ்வை வாழ்கிறார். அவரது இன்ப துன்பங்களில் பங்கு கொள்கிறார். பாலியல் தொழிலிருந்து முற்றிலும் விடுபட்டு குடும்பப் பெண்ணாக பொறுப்புடன் செயற்படுகிறார். ஷாகுலின் பொருளாதார நெருக்கடிகளின்போதும் தோள்நின்று உழைத்துப் பாடுபடுகிறார். பத்து வருடங்களுக்கும் மேல் இந்த வாழ்க்கை நீடிக்கிறது. வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதும் ஷாகுல் மிக எளிதாக ஜமீலாவிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறார். புறக்கணிக்கிறார்.
பள்ளிவாயல்களில் குந்தியிருந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்ட பின்னரும் ஆண்கள் பலர் இரண்டாவதாக மூன்றாவது அல்லது நான்காம் மனைவியாக்கிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர். இளம் வயது மகளின் பாதுகாப்புக்காக நளின ஜமீலா ஓடுவது உண்மையில் துயரானது.
நளினி ஜெமீலா பாலியல் தொழிலுக்கு மீண்டும் மீண்டுமாகத் தள்ளப்படுவதற்குப் பின்னால் ஆண்களின் ஆசைகள் துரோகங்கள் ஏமாற்றங்கள் மட்டுமே உள்ளது. ஷாகுலுடன் அவர் அச்சுக்கோர்ப்புப் பணியில் ஈடுபட்டதிலிருந்தும் பாலியல் தொழிலாளியாகுவதற்கு முன்பு பல்வேறு கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ளதிலிருந்தும் அவர் கடுமையான உழைப்பாளியாக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் வேலைபார்க்கும் பெண்களிடம் முதலாளி ஆண்களினதும் ஏனையவர்களினதும் அர்த்தமற்ற பெண்ணின் உடலை மையப்படுத்திய எதிர்பார்ப்புகளும் வருத்தமளிக்கின்றன.
நளீனி ஜமீலா சுயசரிதையில் கூறியிருக்கும் ஒரு கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்."இதை (பாலியலை) விற்பனை செய்யக்கூடாது என்று சொல்வதைவிட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வதுதான் நல்லது"
பாலியல் தொழிலாளிகளின் வாழ்வை குடும்பம் வேறு தொழில்களின் மூலமாக சீரமைப்பதாக பேசப்படுபவவை எல்லாம் வெற்று விவாதங்கள் வீணான முயற்சிகள்.