நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 PM | Best Blogger Tips
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்: 

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.
 
Via ஆரோக்கியமான வாழ்வு