வேப்பம் பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:58 PM | Best Blogger Tips
வேப்பம் பொடி

வேப்பம் பூ summer-ரில் அதிகமாகக் கிடைக்கும். இல்லை என்றாலும் சென்னையில் அம்பிகா அப்பளம், சாரதா ஸ்டோர், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் விலை அதிகம் என்றாலும் வாங்கி, கொஞ்சம் சுத்தம் செய்து கொண்டு இந்தப் பொடியை இடித்துக் கொள்ளுங்கள். உடம்புக்கு ரொம்ப நல்லது. வேப்பிலை கட்டியே கூட பாக்கெட்டில் கிடைக்கிறது. இருந்தாலும் நாமே வீட்டில் செய்தால் ஒரு சந்தோஷம்தான்.

நிறையா தண்ணீர் விட்ட மோரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியை போட்டு கலக்கி குடித்தால் தேவாமிருதம் கூட வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள். அநியாயத்துக்கு வெளியே எங்கேயாவது சாப்பிட்டு விட்டு வந்துட்டீங்கன்னா, நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை, வயிறு உப்பி இருக்கிறது, மந்தமாய் உணருதல், food poisoning ஆகிடுமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. இஞ்சி எலுமிச்சை சாறில் இதை ஒரு டீஸ்பூன் போட்டு கலக்கி குடித்தால் வயிறு சாதாரணமாகிவிடும்.

ஒரு டவரா அளவுக்கு வேப்பம் பொடி செய்ய தேவையானவை:

வேப்பம்பூ - 1 கப்
வேப்பங்கொழுந்து (கிடைத்தால் அமோகம்) - ஒரு கைப் பிடி
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
நீள வற்றல் மிளகாய் - 4
பொடி பெருங்காயம்- ஒரு டீஸ்பூன் 
கல் உப்பு - தேவைக்கேற்ப (ஒரு டீஸ்பூன் அளவு போடலாம்)

வேப்பம் பூ காய்ந்திருந்தால் பரவாயில்லை. பச்சையாய் இருந்தால் அப்படியே நிழல் உலர்த்தலாய் காய வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்தையும் அதே போல நன்றாக அலசி உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்து தொட்டால் கையில் ஒட்டுமே அந்தமாதிரிக் கொழுந்தாக இருக்க வேண்டும். 

எல்லாவற்றையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வாசனை (தீய்ந்த வாசனை இல்லீங்க) வரும் வரை வறுத்துக் கொண்டு ஆற வைக்கவும். முதலில் கடலைபருப்பு, வற்றல் மிளகாய், பின் உளுந்து, பின் மிளகு, வரமிளகாய், கல் உப்பு கடைசியில் பெருங்காயம் மற்றும் வேப்பம்பூ, வேப்பங்கொழுந்து என்று ஒவ்வொன்றாக சேர்த்து பொடிக்கவும்.

புழுங்கரிசி சாதத்தில் இந்தப் பொடியை ரெண்டு ஸ்பூன் தூவி, சீரகத்தை நெய்யில் பொரித்து அதன் மேல் ஊற்றி கலந்து சாப்பிடலாம். நெய் வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் காய்ச்சியும் ஊற்றலாம். 

தணலில் சுட்ட மிளகு அப்பளம் அல்லது அரிசி அப்பளம் அருமையாக இருக்கும். தக்காளி ராய்த்தா கூட நன்றாக இருக்கும். 

ஜுரம், வயிற்றுக்கடுப்புக்கு சாப்பாடு பத்தியம் என்றால் தயிர் தக்காளி எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மோர் சாதத்துக்கும் இந்தப் பொடியை தொட்டுக் கொள்ளலாம்.

Via  ஆரோக்கியமான வாழ்வு