பூரணத்துவம் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:06 PM | Best Blogger Tips

 

 யோகத்தின் பூரணத்துவம் || Chapter 1 || Perfection of Yoga - YouTube

கேள்வி - கடவுள் உங்கள் முன் தோன்றினால் அவரிடம் என்ன கேட்பீர்கள் ?

இராம் மனோகர் - #பூரணத்துவம் கேட்பேன்.

கேள்வி - ஏன் இந்த உலகம் சமநிலை பெற வேண்டும், ஏற்ற தாழ்வு இல்லாத நிலை வேணடும், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கேட்க மாட்டீர்களா ? அதைத்தானே உங்கள் குருநாதர் விரும்பினார் ?

இராம் மனோகர் - என் குருநாதருக்கு முன்பே புத்தன், ஏசு, நபிகள், மகாவீரர் போன்ற எண்ணற்ற ஞானிகள், மகான்கள், ரிஷிகள் தோன்றினார்களே !!?அவர்களும் இதைதானே விரும்பினார்கள் ? இறை தரிசனம் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அவர்கள் விருப்பமே இது வரையிலும் நடக்கவில்லையே ?

#ஏன்_நடக்கவில்லை ?

ஏன் நடக்கவில்லை என்றால், அவர்கள் கருத்துகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம். அதனால்தான் நடக்கவில்லை. பிரபஞ்சத்தைப் பொருத்த வரை ஏற்ற தாழ்வு என்பது சிருஷ்டியின் அடித்தளம். அது இல்லாமல் பிரபஞ்ச இயக்கமே இல்லை, உற்பத்தியும் இல்லை. குறைகளை நிறைவு செய்வதே இயக்கம். ஒரு நிறைவு ஏற்படும் பொழுது இயல்பாகவே குறைவு ஏற்படுவதும் சகஜம். மீண்டும் அந்தக் குறையை நிறைவுபடுத்த வேண்டி இயக்கம் தொடரும். இதை நிறுத்தவே முடியாது. நிறுத்தினால் உலகம் நின்று விடும்.

இங்கே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்.... நாம் களைய வேண்டியது பிரபஞ்சத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை அல்ல. இங்கே ஒரு பக்கம் தோண்டினால்... ஒரு பக்கம் மேடாகும். எனவே நாம் தோண்ட வேண்டியதோ அல்லது நிரப்ப வேண்டியதோ வெளியே பிரபஞ்சத்தில் அல்ல. நம் உள்ளே. அங்கேதான் நாம் தோண்ட வேண்டும், நிரப்ப வேண்டும், சமநிலைப்படுத்த வேண்டும். அதுதான் பூரணத்துவம். அதற்காகதான் நாம் தோன்றியிருக்கிறோம். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். வெளியே தோண்டிக் கொண்டிருக்கிறோம், மூடிக் கொண்டிருக்கிறோம், இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்ற தாழ்வுகள் அதிகமாகியிருக்கிதேயல்லாமல், குறைந்தபாடில்லை

மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர். - நிறைநிலை என்பதே மனிதனின் இயல்பாக  இருக்கிறது. மனிதன் எப்பொழுதும் பூரணத்துவத்தை உடையவனே. ஆனால், அதை ...

#தன்னையறிந்தால்_தனக்கொரு_கேடில்லை,

#நான்_யார்_என்று_விசாரி,

#பூரணமே_தெய்வமென்று_உணரப்பா,

#பிரக்ஞானம்_பிரம்மம்,

#அகம்_பிரம்மாஸ்மி

போன்ற வார்த்தைகளையெல்லாம் மறந்து விட்டு, வெளியே சமநிலையை தேடிக் கொண்டிருக்கிறோம், அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளும் அது நடக்காது. ஒவ்வொரு மனிதரும் தன்னை உணர வேண்டும், தற்சோதனை செய்து தூய்மை பெற வேண்டும், தவ நிலையில் பூரணத்துவம் பெற வேண்டும் என்றே என் குருநாதர் விரும்பினார்.

இந்த மூன்றும் நடந்து விட்டால்...!!!

ஒருவர் பூரணத்துவத்தை, பரிசுத்த நிலையை பெற்று விட்டால்...!!!

அவருக்கு ஏற்ற தாழ்வுகள் என்பதே கிடையாது. வாரியார் சுவாமி சொல்வது போல...

#கீழே_இருந்து_பார்த்தால்தான் #மேடு_பள்ளம். #மேலே_உயரத்தில்_அதாவது_கடவுள்_நிலையில் #இருந்து_கொண்டு_பார்த்தால்_பூமி_ஒரே_சமமாகதான்_தோன்றும்.

முயற்சித்துப் பாருங்கள்.... வாழ்த்துகள். வாழ்க வளமுடன்..

 

நன்றி 

இணையம்