பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 6:05 PM | Best Blogger Tips
சல்பர் அதிகம் இருக்கும் உணவுகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் இது உள்ள உணவுகளை சொல்வது மிகவும் கடினம். இதற்கு காரணம், இது உணவுப் பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே இருக்கும். மேலும் நிறைய உணவுகளில் சல்பர் இருக்கும் ஆனா இருக்காது நிலைமை தான். ஆனால் சல்பர் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமச்சத்து. இத்தகைய சத்து உடலுக்கு போதிய அளவு நிச்சயம் கிடைக்க வேண்டும்.
சல்பர் உடலுக்கு மட்டுமின்றி அழகிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படியெனில் இன்றைய காலத்தில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பரு சல்பர் உணவுகளை சாப்பிடுவதால் போய்விடும். எப்படியெனில் சல்பர் ஒரு இயற்கையான ஆன்டி-செப்டிக் பொருள். இது சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும். மேலும் முகத்தை பொலிவோடு, சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதனையே உடலுக்கு என்று பார்த்தால், சல்பர் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். அதுமட்டுமின்றி சல்பர் கூந்தல் ஆரோக்கியத்திலும் பெரும் உதவியாக உள்ளது. ஏனெனில் சல்பர் உணவுகள் தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லையை நீக்கி, வறட்சியை போக்கிவிடும்.

இத்தகைய சல்பரை பெரும்பாலும் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளில் தான் பெறுகிறோம். உதாரணமாக, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை மற்றும் மாட்டிறைச்சிகளில் சல்பர் அதிகம் உள்ளது. அதுவே சைவ உணவுகளில் பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. எனவே சல்பர் அதிகம் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து, உடல், சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.



முட்டை 

முட்டையில் புரோட்டீன் மட்டும் தான் அதிகம் உள்ளது என்று நினைத்திருப்போம். ஆனால் இதில் சல்பரும் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே முட்டையை வேக வைத்தோ அல்லது பாதியாக வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை முற்றிலும் பெறலாம்.

பூண்டு

மசாலாப் பொருட்களில் ஒன்றான பூண்டிலும் சல்பர் அதிகம் உள்ளது. எனவே சாலட் செய்யும் போது, அதில் சிறிது பச்சை பூண்டை நறுக்கிப் போட்டு, அத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.


ஆளிவிதை 

ஆளி விதையில் குறைந்த அளவில் சல்பர் இருந்தாலும், அதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கொலஸ்ட்ரால் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளாக நிறைந்துள்ளது.


வெங்காயம் 

வெங்கயாம் மற்றும் பூண்டு இரண்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தது தான். அதிலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், அதிலிருந்து அதிகப்படியான சல்கர் கிடைக்கும். இதனால் தான் பொடுகுத் தொல்லை இருப்பவர்களை, பச்சை வெங்காயத்தை அரைத்து தலையில் பூசி குளிக்கச் சொல்கிறார்கள்.



வால் நட் விதைகள்

மற்றும் நட்ஸில் சல்பர் அதிகம் இருக்கும். ஏனெனில் அவற்றை சமைப்பதில்லை அல்லவா, அதனால் தான். அதிலும் வால் நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சல்பர் நிறைந்துள்ளது.

மாட்டிறைச்சி 

பொதுவாக சல்பரை புரோட்டீன்கள் மூலம் தான் பெறுகிறோம். அதிலும் சல்பர் அமினோ ஆசிட்டுகளில் இருந்து தான் கிடைக்கிறது. முக்கியமாக விலங்குகளின் அமினோ ஆசிட்டுகள் மூலம் தான் அதிகம் கிடைக்கிறது.


சிவப்பு குடைமிளகாய் 

குடைமிளகாயில் நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முதுமை அடைவதைத் தடுக்கும் பொருள் போன்றவை உள்ளது. அதேசமயம் இதில் சருமத்தை அழகாக்கும் சல்பரும் அதிக அளவில் உள்ளது.


கடல் உணவுகள் 

கனிமச்சத்துக்களில் சல்பரும் ஒன்று. அத்தகைய சத்து கடல் உணவுகளில் அதிக அளவில் கிடைக்கிறது. முக்கியமாக, இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைத்துவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.


பரட்டை கீரை (kale) 

பச்சை இலைக் காய்கறிகளில் கேல் எனப்படும் பரட்டை கீரையில் சல்பர் அதிகம் உள்ளது. அதேப் போல் மற்ற காய்கறிகளான ப்ராக்கோலி மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றிலும் சல்பர் உள்ளது.

சீஸ் 

பாலும் விலங்குகளின் மூலம் கிடைக்கும் ஒரு புரோட்ஐன் தான். அத்தகைய பொருளை வைத்து செய்யப்படும் சீஸில் நிறைய சல்பர் உள்ளது. குறிப்பாக சீஸ் வகைகளில் பார்மெசன் சீஸில் தான் அதிக அளவில் சல்பர் நிறைந்துள்ளது.


அஸ்பாரகஸ் (Asparagus) 

இது ஒரு ஆரோக்கியமான ஒரு சல்பர் நிறைந்த மூலிகை. இதனை பொதுவாக சாலட் மற்றும் சூப்பில் தான் சேர்ப்போம். அதிலும் இதனை சமைத்து முடித்ததும் இறுதியில் ரெசிபிகளில் போடுவதால், இதில் உள்ள சத்துக்களை முற்றிலும் பெறமுடிகிறது.


பச்சை உணவுகள் 

மேற்கூறிய அனைத்து உணவுப் பொருட்களையும் பச்சையாகவோ அல்லது அளவாக சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சல்பரானது உடலுக்கு முற்றிலும் கிடைக்கிறது. ஏனெனில் சல்பர் ஒரு அரிய கனிமச்சத்து. இது அதிக வெப்பப்படுத்தும் போது வெளியேறிவிடும். எனவே முடிந்த அளவு பச்சையாக உணவுகளை சாப்பிடுவது நல்லது.



Via அறிவியல்