ரத்த பரிசோதனையின் மூலம் வயதை கண்டறியலாம்: ஆய்வாளர்கள் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:49 PM | Best Blogger Tips


உயிரினங்களின் வாழ்வில் எப்போது மரணம் வரும்? என்பதை யாரும் சொல்லிவிட முடியாது.ஆனால் ரத்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றின் முனைகளில் "டெலோமர்ஸ்" என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன.

அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும் போது, டெலோமர்ஸ்சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.

இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும்.

அந்த அடிப்படையில் செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

அடுத்ததாக இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.



Via அறிவியல்