எலும்புகளின் ஆரோக்கியம் பற்றிய 9 கட்டுக்கதைகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips
உடலில் எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. முந்தைய காலத்தில் பொதுவாக மக்களுக்கு எலும்புகளில் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டி பிறகே ஏற்படும். ஆனால் தற்போதைய நவீன உலகில், மக்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் இளம் வயதிலேயே ஏற்படுகிறது.
ஆனால் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் பிரச்சனை பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் தான் ஏற்படுகிறது. ஆனால் அதேசமயம் ஆண்களும் கால்சியம் குறைபாட்டினால், இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இது போன்று உடலின் ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பற்றி நிறைய நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள், இன்னும் மக்கள் மத்தியில் உள்ளன.

எனவே அந்த மாதிரியான கட்டுக்கதைகளை முறித்து, அறிவியல் பூர்வமான உண்மைகளை தெரிந்து கொண்டு நடந்து கொள்வது சிறந்தது. இப்போது எலும்புகள் பற்றிய மக்களின் கட்டுக்கதைகள் என்னவென்று பார்த்து, அதை உடனே முறித்து, அறிவியல் பூர்வமான உண்மைகளை உணர்ந்து கொள்வோமா!!!





கட்டுக்கதை - 1 

பெண்கள் மட்டும் தான் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு ஆளாவார்கள் என்பது. உண்மையில் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உடலில் கால்சியம் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி, கால்சியம் குறைவாக இருக்கும் ஆண்களுக்கும் ஏற்படும்.



கட்டுக்கதை - 2 

சரியான நிலையில் உட்காராமல் இருந்தால், முதுகு வலி ஏற்படும் என்பது. ஆனால் பொதுவாக முதுகு வலியானது உருவாவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிறு காரணம் தான் சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.



கட்டுக்கதை - 3 

ஆஸ்டியோபோரோசிஸ் மாதவிடாய் பிறகு தான் ஏற்படும். உண்மையில் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும் போது உண்டாகும். ஒரு வேளை மாதவிடாய் சரியாக நடைபெறாவிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும்.



கட்டுக்கதை - 4 

கால்சியம் அதிகம் எடுத்தால், சிறுநீரக கற்கள் ஏற்படும் என்று நினைப்பது. ஆனால் உண்மையில் கால்சியம் ஒரு கரையக்கூடிய ஒரு சத்து. இத்தகைய சத்து, சிறுநீரகத்தில் தங்கி, கற்களை உண்டாக்கும் என்று சொன்னால் நம்ப முடியுமா? வேண்டுமெனில் கடல் உணவுகளில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட், சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கும்.


கட்டுக்கதை - 5 

ஆண்களை விட பெண்களுக்கு தான் கால்சியம் அதிகம் வேண்டும் என்று சொல்வது. உண்மையாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான அளவில் தான் கால்சியம் சத்துக்கள் வேண்டும். வேண்டுமெனில் பெண்களுக்கு 51 வயது அல்லது மாவிடாய் நின்ற பின்னர் அதிக அளவில் கால்சியம் வேண்டும், ஆண்களுக்கு 71 வயதுக்கு மேல் அதிகம் தேவைப்படும்


கட்டுக்கதை - 6 

கால்சியம் குறைவாக சாப்பிடுவதால் மட்டும் தான் ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகிறது என்பது. பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் ஹார்மோன் பிரச்சனையால் தான் உண்டாகிறது. அதற்காக கால்சியம் அளவுக்கு குறைவாக எடுத்தாலும், அந்த பிரச்சனை உண்டாகும் தான். சொல்லப்போனால், கால்சியம் உள்ள உணவுகளை உண்டால் மட்டும், அவை உடலில் முற்றிலும் செல்லாது, அத்துடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், தான் கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்படும்.


கட்டுக்கதை - 7 

முதுகு வலி ஒரு பொதுவான பிரச்சனை என்று நினைப்பது. ஆம், இது ஒரு சாதாரண பிரச்சனை தான், ஆனால் இது சுகாதாரப் பிரச்சனையால் உண்டாவதில்லை. இதனை சரியாக கவனிக்காமல் இருப்பதால் தான், அவ்வப்போது வலி ஏற்படுகிறது.


கட்டுக்கதை - 8 

முதுகு வலிக்கு அறுவைசிகிச்சை செய்வது தேவையில்லாதது என்று சொல்வது. உண்மையில் அடிக்கடி முதுகு வலி வந்து, தண்டுவடத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், அவை இன்னும் அதிகம் தான் ஆகும். மேலும் அவ்வாறு அதிகமானால், தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நடக்க முடியாத நிலை வந்துவிடும். எனவே மருத்துவரை அணுகி, அதனை சரியாக பரிசோதித்து, வேண்டிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது.


கட்டுக்கதை - 9 

எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைக்கு ஓய்வு சரியான தீர்வாக இருக்கும் என்று நினைப்பது. ஆனால், அவ்வாறு ஓய்வு எடுத்தால், அவை எலும்பிற்கு இன்னும் தோய்வை தான் ஏற்படுத்தும் என்று நிறைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக ஏதாவது உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த தீர்வை தரும்.



Via அறிவியல்