கூந்தல் உதிருதா? யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....

மணக்கால் அய்யம்பேட்டை | 6:09 PM | Best Blogger Tips



யூகலிப்டஸ் என்றதுமே அதன் மணம் நினைவுக்கு வந்து, மனதை அமைதிப்படுத்தும். ஏனெனில் அந்த அளவு அதன் வாசனையானது சூப்பராக இருக்கும். அத்தகைய யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் யூகலிப்டஸ் எண்ணெயில், அழகைத் தரும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதே சமயம், இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம். நிறைய மக்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர, இந்த எண்ணெயை பயனப்டுத்துவார்கள். மேலும் இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால் ஸ்கால்ப் ஆரோக்கியத்துடன் இருந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

எனவே இத்தகைய யூகலிப்டஸ் எண்ணெயை எப்படியெல்லாம் கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று பார்ப்போமா!!!

யூகலிப்டஸ் ஆயில் ஹேர் பேக்குகள்: 



யூகலிப்டஸ் ஆயில் மசாஜ்: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும் வைக்க, யூலிப்டஸ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, இரவில் படுக்கும் போது தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பட்டுப் போன்று இருக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் எலுமிச்சை: ஒரு பௌலில் வெதுவெதுப்பான எண்ணெயை விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, கூந்தலுக்கு நன்கு தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் தடைபட்டு, அதன் வளர்ச்சி அதிகமாகும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்: கூந்தல் நன்கு வலுவோடு, நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், யூகலிப்டஸ் ஆயிலுடன், பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக வெதுவெதுப்பான முறையில் சூடேற்றி, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயில்: இது மற்றொரு முறை. இதில் யூகலிப்டஸ் எண்ணெயுடன், ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் செம்பருத்திப்பூ: இதற்கு செம்பருத்திப்பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அந்த பூவை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் செம்பருத்திப் பூவை ஊற வைத்த நீரில் அலசி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் இயற்கையான முறையில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

இவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்க யூகலிப்டஸ் ஆயிலைப் பயன்படுத்தும் முறை. இந்த மாதிரி நீங்கள் எப்போதாவது செய்ததுண்டா? இல்லையெனில் உடனே முயற்சி செய்து, கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரித்து, நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள்.





Via அறிவியல்