ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.
ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.
மார்பக புற்று நோய் என்றால் என்ன?
மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று அனுக்கள் மற்ற அனக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள இழைமங்களை (tissues) ஆக்கிரமிக்கும்.
மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும்இ அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.
2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்
3. மார்பகக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.
4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)
5. சமீப காலமாக மார்பகக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.
மார்பகப் புற்று நோயின் வகைகள்:-
மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. மிகச் சாதாரண வகைகள் கிழே தரப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை தெறியலாம். அவ்வாறு மார்பகப் புற்றுநோய் எங்கும் பரவுகிறதோ என முற்றிலும் பரவிய புற்றுநோய் எனலாம்.
மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)
மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.
1. முதல் படி நிலை:-
முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றம், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.
2. இரண்டாம் படி நிலை:-
அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றம் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.
3. மூன்றாம் படி நிலை:-
பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றம் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.
4. நான்காம் படி நிலை:-
இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.
மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?
மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கபடியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை காலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயன் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முறைமையானது. ஒன்றோ அல்லது பல இணைந்த மருத்துவத்தை ஒருவர் பெறலாம். உங்கள் மருத்துவ திட்டர்றைப்பற்றி உங்கள் மருத்துவம் உங்களுடன் விளக்குத் தூறுவார்.
அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும். இந்த அறுவை மருத்துவத்தின் பயன்கள், சிக்கல்கள், எதிர்பார்க்கும் முடிவுகள் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.
அறுவை மருத்துவத்தின் வகைகள்:-
அ. லம்பாக்டமி (Lumpectomy)
இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.
ஆ. மாங்டெக்லொமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன. அவை யாவன.
சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)
இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுதும் அகற்றப்படும்.
ரேடிகல் மாஸ்டெக்டமி:-
இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சற்றுகதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும். பெரும்பாலான ஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகுச் செய்யப் படம் தனி அறுவை மருத்துவத்தின் போது மாபக மீட்டுரு வாக்கம் (re constriction) செய்யப்படும்
மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப் படும். மார்பு சைதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுவற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப் படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்எடக்டமியும் அடங்கும்.
கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும். கதிர் பாய்ச்சு மருத்துவ முறை இப்போது பெரும்பாலும் லிம்பெக்டமி உதவியுடன் இணைந்து தரப்படுகிறது. இது மெஸ்டெக்டமிக்குப் பிறகு பெரிதும் தேவைப் படுவதில்லை.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. உறர்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் தாங்கள் வளர தேவையான உறார்மே £ன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் உறார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் உறார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.
Via Karthikeyan Mathan