ஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:43 PM | Best Blogger Tips


தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். தொலைபேசிக்குப் பின் ஒலி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கிரகாம் பெல் தனது குரலை ஒரு தகட்டில் பதிவு செய்து வைத்தார். அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.

தொலைபேசி கண்டுபிடிப்புக்காக அறியப்பட்டிருந்தாலும், கிரகாம் பெல் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார்.

அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார். .

தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார்.

இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர், 'கேளுங்கள் என் குரலை - அலெக்சாண்டர் கிரகாம் பெல்' என்று கூறியுள்ளார்.

மேலும் இதில் வரிசையாக எண்களை அவர் கூறியுள்ளார். அத்துடன் 'மூன்றரை டாலர்கள்', 'ஏழு டாலர்கள் மற்றும் 29 சென்ட்டுகள்' என்று பல பண மதிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் இதனை வணிக விசயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.




Via அறிவியல்