எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு
செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம்
உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான
விளைவுகளை நேரிடக் கூடும். அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும்
பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச்
சாப்பிட்டால் தான் மிகவும் ஆபத்தானது.அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர்,
உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ்
கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று
கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது
எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை
அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு
உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று
பார்ப்போமா!!!
பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை
பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே
அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து
செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.
உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட
உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட
இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை
செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.