ஸ்ரீ விநாயகர்
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம் !
ப்ரஸன்னவதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே !!.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்
கம் கணபதயே வர வராத சர்வ
ஜனம்மே வசமானய ஸ்வாகா!!.
ஓம் ஏகதந்தாய வித்மஹே!
வக்ரதுண்டாய தீமஹி!!
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!.
ஓம் தத்புருஷாய வித்மஹே!
வக்ர-துண்டாய தீமஹி!!
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்!.
வக்ர துண்ட மஹாகாய
ஸுர்ய கோடி ஸமப்ரப !
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!.
கஜா நநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் !
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் !!.
மூக்ஷிக வாகன மோதக ஹஸ்தா!
சாமள கர்ண விளம்பித ஸூத்ர!
வாமன ரூப மஹேஸ்வர புத்ர!
விக்ன விநாயகா பாத நமஸ்தே!!.
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி
நுடங்காது பூக்கொண்டு துப்பார்
திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு !!.
அற்புதக் கீர்த்தி வேண்டின், ஆனந்த வாழ்க்கை வேண்டின்,
நற்பொருள் குவிதல் வேண்டின், நலமெலாம் பெருக வேண்டின்,
கற்பக மூர்த்தித் தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யிலை கண்ட உண்மை !!.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் ,
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா !!.
ஐந்து கரத்தனை யானை முகத்தானை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே !!.
அல்லல் போம் வல்வினை போம் அன்னை
வயிற்றிற் பிறந்த தொல்லை போம் !
போகத் துயரம்போம் நல்ல குணமதிக
மாமஞணைக் கோபுரத்தில் மேவு
கணபதியைக் கைதொழுதக் கால் !!.
விநாயகனே வெல்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து !!.
ஸ்ரீ முருகன்
ஓம் தத்புருஷாய வித்மஹே!
மகாசே நாய தீமஹி!!
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்!.
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே தொழுவேன் நான் !!.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !!.
அருள்மிகு சண்முகர்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே !
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே !
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே !
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே !
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே !
வள்ளியை மணம் புணர வந்தமுக மொன்றே !
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் !
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமானே !!
ஸ்ரீ ஐயப்பன்
ஓம் பூத நாதாய வித்மஹே!
பவ நந்தனாய தீமஹி!!
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்!.
ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
சர்வலாபாயா,சத்ரு நாஸாயா,
மதகஜ வாகனாயா , மஹா
சாஸ்த்ரே நமஹ !!.
ஸ்ரீ சிவன்
ஓம் தத்புருஷாய வித்மஹே!
மகா தேவாய தீமஹி!!
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்!.
ஹர நம : பார்வதீபதையே !
ஹர ஹர மகாதேவ !!
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !!
பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்க்கொன்றை அணிந்தவனே மன்னே
மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே
உன்னையல்லாமல் இனியாரை நினைக்கேனே !!.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !!.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும் பனித்தசடையும் பவளம்போல்
மேனியில் பால்வெண்ணீரும் இனித்தமுடைய
எடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்
பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !!.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே !!.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆள்என்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி !!.
ஸ்ரீ கோமாதா
அர்த்தனாரீசனில் அம்மன் ஒடுக்கம்
அரிகர வடிவில் திருமால் அடக்கம்
பிரம்மன் இருப்பது சிவனது வலப்புறம்
பரமனிடத்தில் யாவரும் அடைக்கலம்
சோமாஸ்கந்த வடிவில் முருகன்
உமாமகேசுவரம் கொண்டது கணபதி
சூரியர்சந்திரர் அவனது விழிகள்
ஐம்பெரும்பூதம் அவனது வடிவம்
எந்நாட்டவர்க்கும் இறைவன் சிவனே
எல்லோருக்கும் தந்தையும் தாயும் அவனே
உடலுக்கு உயிர்போன்று எல்லோருக்கும் சிவம்
சிவம்நீங்கி நின்றாலோ எல்லாமே சவம் !!.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
குருப்ரம்மா குருர் விஷ்ணு!
குருதேவா மகேஸ்வர!
குரு ஸாஷாத் பரம் ப்ரம்மா!
தஸ்மை ஸ்ரீ குரவே நாம!!.
ஓம் தட்சிணாமூர்த்தயேச வித்மஹே!
த்யாநஸ்த்தாய தீமஹி!!
தந்நோ தீச ப்ரசோதயாத்!.
ஓம் வருஷப த்வஜாய வித்மஹே!
க்ருணி ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ குரு: ப்ரசோதயாத்!.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
ஓம் பைரவாய வித்மஹே!
ஹரிஹரப்ரம் ஹாத்மகாய தீமஹி!!
தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ
ப்ரசோதயாத்!.
நந்திச்வரர்
ஓம் தத்புருஷாய வித்மஹே!
சக்ர துண்டாய தீமஹி!!
தந்நோ நந்தி ப்ரசோதயாத்!.
ஸ்ரீ பிரம்மா
ஓம் வேதாத் மகாய வித்மஹே!
ஹிரண்யகர் பாய தீமஹி!!
தந்நோ பிரம்மா ப்ரசோதயாத்!.
ஸ்ரீ சரஸ்வதி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே!
விரிஞ்சி பந்த்யைச தீமஹி!!
தந்நோ வாணி ப்ரசோதயாத்!.
ஓம் வாக் தேவீ ச வித்மஹே!
ஸர்வ ஸித்தீச தீமஹி!!
தந்நோ வாணீ ப்ரசோதயாத்!.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின்
உள்ளே இருப்பாள் இங்கு வாராது இடர்
படிக நிறமும் ,பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரையும் போற் கையும் -
துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும்
துதித்தால் கல்லும் சொல் லாதோ கவி ?.
ஸ்ரீ காயத்ரி
ஓம் பூர்ப் புவஸ்ஸுவ:
தத்ஸ விதுர் வரேண்யம்!
பர்கோ தேவஸ்ய தீமஹி!!
தியோ யோன ப்ரசோதயாத்!.
ஸ்ரீ துர்க்கா தேவி
ஓம் காத்யாய நாய வித்மஹே!
கன்யாகுமாரி தீமஹி!
தந்நோ துர்கி ப்ரசோதயாத் !!.
ஓம் ஸர்வமங்கள மாங்கல்யே!
ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே!
ஸரண்யே த்ரியம்பகே தேவி!
நாராயணீ நமோ ஸ்துதே!
த்ஸயதே சத்பதிம் தேஹி!
ஸர்வ்மாங்கல்யே சுமங்களே!!.
ஸ்ரீ அன்னபூரணி
அன்னபூரணி நாமம் சொன்னால் அன்னம்
கிடைக்குமே அன்னை அவள் பாதம் கண்டால்
சொர்ணம் கிடைக்குமே எண்ணம் போல்
சௌபாக்கியம் வந்து சேருமே திசைஎட்டும்
தாயிருந்தால் ஜென்மம் தேறுமே
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி
அயிகிரிநந்தினி நந்தித மேதினி
விச்வவிநோதினி நந்தனுதே !
கிரிவரவிந்த்ய சிரோதினி வாஸிநி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே !!
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்ருதே !
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே !!.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
அம்பா சாம்பவீ சந்திரமௌலிரமலா !
அபர்ணா உமா பார்வதீ காளி !
ஸைமவதீ ஸிவா த்ரி நயனீ காத்யாயநீ !
பைரவீ சாவித்ரீ நவயௌவனாகாசுபகரீ !
சாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா சித்ருபி !
பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ !!.
ஸ்ரீ அபிராமி
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும் ! கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் !
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் ! தாழாத கீர்த்தியும் மாறாத
வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் !
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் ! துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் !
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே !
ஆதி கடவூரின் வாழ்வே !அமுதீசர் ஒருபாகம்
அகலாத சுகபாணி! அருள்வாமிஅபிராமியே !!.
ஸ்ரீ மாரியம்மன்
சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி
கவுணியார்க்குப் பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும்இள நகைபோற்றி
ஆரணநூ புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி !!.
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
இயற்கை அறிவொளி ஆனாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
அன்னை மாரியே போற்றி போற்றி !!.
ஸ்ரீ லட்சுமி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே!
விஷ்ணு பந்த்யை ச தீமஹி!!
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்!.
அஷ்ட லெட்சுமி
ஆதி லட்சுமி அருகில் வருக !
ஜோதி சந்தான லட்சுமி வருக !
கஜ லட்சுமியே கனிந்து வருக !
விஜய லட்சுமியே விரைந்து வருக !
தன லட்சுமியே தானும் வருக !
தான்ய லட்சுமித் தாயே வருக !
மகா லட்சுமியே மகிழ்வுடன் வருக !
புகழ்தரும் வீர லட்சுமியே வருக !
கஷ்டம் விலகிக் கனதனம் கொழிக்க !
அஷ்ட லட்சுமியே அடியெடுத்து வைக்க !!.
யாதேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ்
தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம !!
தனலெட்சுமி - புஷ்டிரூபேண
வித்யாலெட்சுமி - புத்திரூபேண
தான்யலெட்சுமி - க்ஷுதாரூபேண
சௌபாக்யலெட்சுமி - த்ருதி ரூபேண
வீரலெட்சுமி - முஷ்டிரூபேண
சந்தானலெட்சுமி - மாத்ரூரூபேண
காருன்யலெட்சுமி - தயாரூபேண
மஹாலெட்சுமி - லக்ஷ்மீ ரூபேண !!.
ஸ்ரீ குபேரன்
ஓம் யக்ஷாய குபேராய!
வைஸ்ரவணாய தநதாந்யாதிபதயே!
தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே!
தேஹி தாபய ஸ்வாஹா!!.
ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம் தாமோதராய வித்மஹே!
ருக்மணி வல்லபாய தீமஹி!!
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்!.
ஸ்ரீ ராமர்
சாந்தாகாரம் புஜகசயணம் பத்மநாபம்
ஸூரேசம் விஸ்வாதாரம் கனகசத்ருசம்
மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மிகாந்தம்
கமலநயணம் யோகிஹிருத்யானகம்யம்
வந்தேவிஷ்ணும் பவபயஹரம்
ஸர்வலோகைக நாதம் !!.
அருமறை முதல்வனை ஆழிமாயனை
கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனை
திருமகள் தலைவனை தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம் !!.
ஓம் தசரதாய வித்மஹே!
சீதா வல்லபாய தீமஹி!!
தந்நோ ராம ப்ரசோதயாத்!.
கிருஷ்ணா - ராமா
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே !!.
ஸ்ரீ வெங்கடாஜலபதி
திருப்பதி மலைமேல் இருப்பவரே !
தீராத வினைகளைத் தீர்ப்பவரே !
விருப்புடன் அன்பர்பணி ஏற்பவரே !
வேண்டிய வரங்களைத் தருபவரே !
ஏழுமலைமேல் இருப்பவரே !
ஏழைகள் துயரம் தீர்ப்பவரே !
அனுதினம் கல்யாண வைபோகரே !
அலர்மேலு மங்கை மணாளரே !
வெங்கடாஜலபதி பெருமானே !
வேண்டிடும் எங்களைக் காப்பவரே !
இக்கணம் எமக்கருள் புரிவாயே !
ஈரேழு லோக நாயகனே !!.
ஸ்ரீ கோவிந்தர்
ஹரி நாராயண கோவிந்தா!
ஜெய நாராயண கோவிந்தா!
பக்த ஜனப்ரிய கோவிந்தா!
பங்கஜ லோசன கோவிந்தா!
பரமானந்தா கோவிந்தா!
தசரத நந்தன கோவிந்தா!
கமலா வல்லப கோவிந்தா!
சீதா வல்லப கோவிந்தா!
ராதா வல்லப கோவிந்தா!
உக்ர பராக்ரம கோவிந்தா!
கோவிந்தா!! கோவிந்தா!! கோவிந்தா !!
ஸ்ரீ குருவாயூரப்பன்
ஓம் மஹா வைகுண்ட நாதாய நாம !
ஓம் மஹா நாராயணா பிதாய நாம !
ஓம் கோவிந்தாய பதப்ரியாய நாம !
ஓம் கோபீஜன சுபாஷிதாய நாம !
ஓம் வல்லபாய பதப்ரீதாய நாம !
ஓம் யந்தா ராஜ சரீர காய நாம !
ஓம் சர்வமோஹன சக்ராய நாம !
ஓம் சக்தி சக்ர சமர்ப்பிதாய நாம !
ஓம் புத்ர பௌத்ர ப்ரதாய நாம !
ஓம் குருவாயு புரேச்வராய நாம !!.
கண்ணன்
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க்
கமலச்செங்கண் அச்சுதா அமரர்ஏறே ஆயர்தம்
கொழுந்தே என்னும் இச்சுவை தவிரயான்போய்
இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும்
வேண்டேன் அரங்கமாநகருளானே !!.
ஸ்ரீ மகா விஷ்ணு
ஓம் நாராயணாய வித்மஹே!
வாசுதேவாய தீமஹி!!
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!.
ஸ்ரீ நிவாசர்
ஓம் நிரஞ்ஜனாய வித்மஹே!
நிரா பாசாய தீமஹி!!
தந்நோ ஸ்ரீ நிவாச ப்ரசோதயாத்!.
ஸ்ரீ ஹயக்ரீவர்
ஞானானந்தமயம் தேவம்!
நிர்மல ஸ்படிகாக்ருதிம்!
ஆதாரம் சர்வ வித்யானாம்!
ஹயக்ரீவ முபாஸ் மஹே!!.
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதைய போதைய !!.
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே!
ஹயக்ரீவாய தீமஹி!!
தந்நோ ஹஸெள: ப்ரசோதயாத்!.
ஸ்ரீ நரசிம்மர்
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே!
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி!!
தந்நோ நரசிம்ஹ: ப்ரசோதயாத்!.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜலந்தம் சர்வதோமுகம் பீஷணம்
பத்ரம் மித்ரியும் மித்ரியும் நமாமிஹம் !!.
ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா !!.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
ஓம் ஸுதர்ஸநாய வித்மஹே!
மஹாஜ்வாலாய தீமஹி!!
தந்நோ சக்ர: ப்ரசோதயாத்!.
ஸ்ரீ சக்கரம்
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வ ஸ்வரூபிணி
சர்வ லோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மகா த்ரிபுரசுந்தரி மகாதேவி சர்வாபீஷ்ட
சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம்
வர்தய வர்தய அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீ தேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீ தேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீ தேவி துப்யம் நமஹ!!.
ஸ்ரீ ஆஞ்சநேயர்
ஓம் ஆஞ்ச நேயாய வித்மஹே!
வாயு புத்ராய தீமஹி!!
தந்நோ ஹனுமாந்: ப்ரசோதயாத்!.
ஓம் ராமதூதாய வித்மஹே!
அஞ்ஜனீ புத்ராய தீமஹி!!
தந்நோ மாருதி: ப்ரசோதயாத்!.
ஐந்திலே ஒன்று பெற்றான்
ஐந்திலே ஒன்றைத்தாவி
ஐந்திலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு
அயலார் ஊரில் ஐந்திலே ஒன்றை
வைத்தான் அவன் அளித்துக் காப்பான் !!.
கருடன்
ஓம் தத்புருஷாய வித்மஹே!
ஸுவர்ண பக்ஷாய தீமஹி!!
தந்நோ கருட: ப்ரசோதயாத்!.
ஸ்ரீ ஆதிசேஷன்
ஓம் சஹஸ்ய சீர்ஷாய வித்மஹே!
விஷ்ணு தல்பாய தீமஹி!!
தந்நோ நாக: ப்ரசோதயாத்!.
சூரியன்
ஓம் அச்வத்வஜாய வித்மஹே!
பாசஹஸ்தாய தீமஹி!!
தன்னஸ் ஸுர்ய: ப்ரசோதயாத்!.
சந்திரன்
நிஸாஹராய வித்மஹே!
சுதா ஹஸ்தாய தீமஹி!!
தன்னச்சந்திர: ப்ரசோதயாத்!.
திங்கள்
பத்ம த்வஜாய வித்மஹே!
ஹேம ரூபாய தீமஹி!!
தந்நோ சோம ப்ரசோதயாத்!.
செவ்வாய்
வீர த்வஜாய வித்மஹே!
விக்ந ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ பௌம: ப்ரசோதயாத்!
புதன்
கஜ த்வஜாய வித்மஹே!
கக ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ புத: ப்ரசோதயாத்!.
வியாழன்
விருஷப த்வஜாய வித்மஹே!
க்ருணி ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ குரு: ப்ரசோதயாத்!
வெள்ளி
அச்வத்வஜாய வித்மஹே!
தனுர் ஹஸ்தாய தீமஹி:
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!
சனி
காக த்வஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!
ராகு
நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ ராஹூ: ப்ரசோதயாத்!
கேது
ப்ரம்ம புத்ராய வித்மஹே!
சித்ர வர்ணாய தீமஹி!!
தந்நோ கேது: ப்ரசோதயாத்!
ஸ்ரீ சரபேஸ்வரர்
ஸாலுவேசாய வித்மஹே!
பக்ஷி ராஜாய தீமஹி!
தந்நோ சரப : ப்ரசோதயாத்!!.
ஸ்ரீ காளி
ஓம் காளி காயை ச வித்மஹே!
சமசான வாசின்யை தீமஹி!
தந்நோ அகோரா ப்ரசோதயாத்!!.
Via Kalai Kumar