உயர்ந்த இந்துமத வேத நெறி, உபநிட தத்துவங்கள் எல்லாம் ஞான எல்லை எனும் தளத்தில் வைத்துப் பொருள் காணாமல் பொருள் உலகியல் எல்லையில் மனிதனுக்குக் கேடயமாக வைத்துப் பயன்படுத்தப்படுவதில் பகவத்கீதையின் நோக்கம் களங்கப்படுத்தப்படுகிறது.
பகுத்தறிவு என்பது எதையும் நேரடியாக ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து அதன் படி நடத்தலே என்பது பகுத்தறிவுச் சுயமரியாதைச் சிங்கங்களின் சீற்றமாக தமிழகத்திலே கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக கொளுகை அளவிலும் ஆட்சி அதிகாரத்தில் அரசியல் திரா"விட"ப் பெத்தடின் இயக்கங்கள் சொல்லி அடித்து, நெத்தியடியாகச் செயல்பட்டு வர மக்களை வழி நடத்தி வருகின்றன.
பகுத்தறிவுப் புரட்(டு)சி புயலாக வீச, சுயமரியாதை கொழுந்துவிட்டெரியும் தமிழகத்தில் வீட்டைக் க்ளீன் செய்ய வீட்டையே கொளுத்துவது என்கிற பாணியில் சீரமைப்புச் சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன். வேதம், இந்துமதம் என்றாலே ஆஆ..ஊஊ..டாய்..டோய் சத்தம் மட்டுமே ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம். அவசியமானது சிறு திருத்தம் புரிந்துகொள்ளும் தளம் பற்றியதில் மட்டுமே அவசியம் என்பது தெரியாதமாதிரி எதுவும் தெரியாதவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு என்று கூவியபடியே நடக்கிறார்கள்!
கீழ்க்கண்ட உயரிய தத்துவங்கள் பகவத் கீதையில் சொல்லப்பட்டவை: இவற்றின் பொருள் ஞான எல்லையில் / தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ளப்படவேண்டும்.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"
"எதைக் கொண்டுவந்தாய் அதை இழந்தேன் என்று சொல்வதற்கு"
"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையதாகிறது"
இந்தத் தத்துவங்களின் பொருளை ஞான எல்லை தளத்தில் வைத்து உணர்கின்ற போது மனிதனுக்கு அவன் சந்திக்கின்ற தினசரி அனுபவங்கள் வாழ்க்கையில் கூடுதல் உந்து சக்தியை தந்து சிறப்பாகச் செயலாற்ற இவை துணை புரிகின்றன.
இந்த் இந்து மதத் தத்துவங்கள் என்பவை தமிழகத்தில் சில காலத்திற்கு முன்பாக சில நிதி நிறுவனங்கள் மேற்சொன்ன கீதை உபதேசத்துடன் கூடிய தினசரி நாள் காட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
இந்த இந்த நிறுவனங்களின் 36% வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தினை முதலீடு செய்த பொதுமக்களுக்கு கீதையுரை வழங்கப்பட்டன:
இந்த மோசடி நிதிநிறுவனங்கள் மூடப்பட்ட போது முதல் கீதையுரை பயன்படுத்தப்பட்டது:
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.."
முதலீடு செய்த பணத்தைத் திரும்பத்தா என்ற பொதுமக்களுக்கு இரண்டாவது கீதையுரை:
"எதைக் கொண்டுவந்தாய் அதைத் திரும்பக் கொண்டுபோவதற்கு"
36% வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்த நபர்களுக்கு மூன்றாவது கீதையுரை:
"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையதாவது இயற்கையின் நியதி"
இது ஸ்மார்ட் லிவிங் அல்ல. கீதை என்ன சொன்னது இவர்கள் மோசடிக்கு கீதை துணைபோனதாக அர்த்தம் கொள்வது பகுத்தறிவாகுமா?
வர்ணாஸ்ரமம் என்று கீதையில் சொல்லப்பட்டது என்ன? அதைச் சுயமரியாதையாகப் பகுத்தறிவு பேசும் இயக்கங்கள் எந்த தளத்தில் வைத்து எப்படி அர்த்தம் செய்து கொண்டு பகவத்கீதையை மோசமான நூல் என்று கும்மியடிக்கின்றன!
இந்துமத வேத சாஸ்திரத்தினை முன்வைத்து மனிதன் தன்னைப் பின்வைத்துக்கொள்ளும் நிலை மாறி சுயநலங்களுக்காக மனிதன் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அதற்குத் தோதாக இந்துமத வேத நெறி சாஸ்திரத்தினைப் பின்வைக்கிறது என்பது மனிதனின் தவறே அன்றி இந்துமத வேத சாஸ்திரத்தின் தவறாகுமா?
சுயலாபங்களுக்காக மனிதர்கள் தவறு செய்வதற்கு இந்துமத வேத நெறி சாஸ்திரத்தினை பழிப்பது என்பது பகுத்தறிவாகுமா? சிறுதிருத்தம் செய்து மனிதத் தவறுகளைக் களைவது எளிதா? இல்லை வேதநெறியையே புறக்கணித்து எந்த நன்னெறி அடிப்படையும் இன்றி புதியதாக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன் என்பது எளிதா? முன்னோர்கள் காலகாலமாக செறிவான தன்னலம் அற்ற சிந்தனைகளின் தொகுப்பான வேதநெறி வாழ்க்கைவழியை இழிமொழிபேசித் திரிவது ஏற்றம் தருமா?
பெரிய சுயமரியாதை, பகுத்தறிவு என்பதெல்லாம் தேவையில்லை. சாதாரணப் பொது அறிவு போதும் ! சிந்திப்பீர்!