1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும்.
2.நாக்குப் புண் குணமாக:- நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து சப்பிட்டு வர நாக்குப் புண் குணமாகும்.
3.உள் நாக்கு சதை வளர்ச்சி தீர:-உப்பும், பழைய புளியும் அரைத்து தொண்டைக்குள் தடவி வர உள் நாக்கில் உண்டாகும் சதை வளர்ச்சி தீரும்.
4.வாய்ப்புண்,உதட்டில் ஏற்படும் வெடிப்பு குணமாக:-அத்திக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்டு வரத் தீரும்.அல்லது ஆலம்பாலைத் தடவி வரத் தீரும்.
5.வாய் துர் நாற்றம் தீர:-நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து தட்டிப் பொடித்து வெந்நீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வர வாய்
துர் நாற்றம் தீரும்.
6.வாயில் ஏற்படும் துர் நாற்றம் நீங்க:-தினசரி கோதுமைப் புல்லை வாயிலிட்டு மென்று துப்பி விடக் குணமாகும்.
7.வாய் நாற்றம் தீர:-கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்
பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் தீரும்.
8.தொண்டைப்புண் மற்றும் ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக:-இலந்தை தளிர் இலையை
கொதிக்க வைத்து உப்பிட்டு வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் குணமாகும்.
9.குரல் கம்மல் தீர:-மாந்தளிர் பொடி ஒரு கிராம் கசாயம் செய்து குடித்து வர குரல் கம்மல்(தொண்டைக் கட்டு) தீரும்.
10.குரல் மாற்றத்தை சரி செய்ய:-கடுக்காய் தோல் சிறிதளவு வாயிலிட்டு ஒதுக்கிக் கொள்ள வரும் உமிழ் நீரை விழுங்கி வர குரல் மாற்றம் தீரும்.
11.இருமல், தொண்டை வலி குணமாக:-சுக்கு, மிளகு, திப்பிலி சம எடை எடுத்துப் பொடி செய்து சுமார் 2கிராம் அளவு தேன் சேர்த்து காலை மாலை உண்டு வர இருமல்,
தொண்டை வலி தீரும்.