மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips

Photo: மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன

Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிப்பிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத்திருப்பதாக சர்வதேச மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிகப்படியான உடல்பருமன் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் முதல், டயபடீஸ் எனப்படும் ஆயுள் முழுவதும் நீடிக்கும் நீரிழிவுநோய் வரை பல்வேறுவகையான நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே உலக அளவில், குறிப்பாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும், இந்தியா போன்ற வேகமாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த அதிகரித்த உடல்பருமன் என்பது மிகப்பெரும் சுகாதார பிரச்சனையாக மாறிவருகிறது. இந்த அதிகரித்த உடல்பருமன் என்பதன் பின்னணியில் மரபணுக்காரணிகள் இருப்பதாக ஏற்கெனவே சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எப்டிஓ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குறிப்பிட்ட மரபணுவின் சில ரகங்கள் இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிட வயிறு பெரிதாக இருப்பதாக ஏற்கெனவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மாற்றமடைந்த எப்டிஓ மரபணுவுக்கும் வயிறு பெரிதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு என்பது இதுவரை சரியாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்திருக்கிறது.

தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இருக்கும் ஆய்வாளர்கள் இந்த தொடர்புக்கான காரணியை கண்டறிந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மனிதர்களின் பசியைத்தூண்டும் நொதிமத்தின் பெயர் க்ரெலின். பசியைத்தூண்டும் இந்த க்ரெலின் என்கிற நொதிமத்தை இந்த எப்டிஓ என்கிற மரபணுக்கள் சிலருக்கு அதிகம் சுரப்பது தான் அவர்களை அதிகம் சாப்பிடத்தூண்டுவதாகவும், அதன் விளைவாக அவர்கள் அதிக பருமனும் உடல் எடையும் உள்ளவர்களாக மாறுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.