மஞ்சள் கிழங்கு பச்சடி /சப்ஜி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips
Photo: மஞ்சள் கிழங்கு பச்சடி /சப்ஜி

பானையில் கட்டி விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம்) மஞ்சள் கிழங்குதான் இதில் முக்கிய அயிட்டம். இந்த பச்சை மஞ்சள் கிழங்கைப் பலர் தூக்கிப் போடுவார்கள்.சிலர் காய வைத்து அல்லது அப்படியே தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மஞ்சளில் தயிர்ப் பச்சடி மாதிரி செய்யும் சப்ஜிதான் இந்த பதிவு.பச்சை என்றால் காய வைக்காத மஞ்சள் கிழங்கு(நிறம் அல்ல) 

தேவையான பொருட்கள் : 

1.பச்சை அல்லது காயவைக்கதாத புதிய மஞ்சள் கிழங்கு 150 அல்லது 200 கிராம்,
2.பெரிய வெங்காயம் மூன்று,
3.தக்காளி மூன்று, 
4.எண்ணெய் 5(அ)4 ஸ்பூன்,
5,சீரகம் ஒரு கைப் பிடி,
6.தாளிக்கும் பொருட்கள்,கறிவேப்பிலை.
7.வரமிளகாய்(அ)மிளகாய்ப் பொடி மூன்று (காரத்திற்க்கு ஏற்ப),
8.உப்பு (தேவைக்கு ஏற்ப),
9.தயிர் ஒரு கப்.
இதில் ஸ்பிரிங் ஆனியன் லீவ்ஸ்,பேபீ கார்ன், போன்றவை, பிரியப் படுவர்கள் ஒரு ரிச்சனஸ் ஆக சேர்க்கலாம். 

செய்முறை : முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்,பின்னர் வெங்காயத்தைப் பச்சடிக்கு ஏற்றார்ப் போல நீளமாகவே அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.பின்னர் தக்காளியை எட்டுத் துண்டங்கள் அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயமும்,தக்காளியும் உங்களுக்கு எப்படி பிடிக்குமே அப்படி வதங்கும் வண்ணம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். 

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு,சூடானதும் சிறிது கடுகு,வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்,கருவேப்பிலை,மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் போட்டுத் தாளித்து,அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், மஞ்சள் கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் சிறிது வதங்க விடுங்கள்,இதில் தக்காளி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். நல்லா வதக்கவும். எண்ணெய் மற்றும் தக்களி விடும் தண்ணீரில் மஞ்சள் கிழங்கை நல்லா வதக்க வேண்டும், இது நல்லா வதங்கி சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்துச் சூட்டில் சிறிது வேக விடுங்கள். தயிர் இல்லாமல் சப்ஜியாகச் சாப்பிடுவர்கள் இரண்டு ஸ்பூன் நெய் விட்டும் வதக்கலாம், சுவை,மணம் கிட்டும்.

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, கப் தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக செய்து கொள்ளுங்கள்.அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும். கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி விட்டு, தயிரில் போடவும். ஆறிய சப்ஜியை தயிரில் போட்டுக் கலந்தால் மஞ்சள் கிழங்கு பச்சடி ரெடீய்ய்ய்ய்ய்ய்.சுவைக்கு ஏற்றவாறு பச்சடியில் உப்புப் போட்டுக் கொள்ளுங்கள். 

இதை ரொட்டி, மற்றும் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். ஒரு சாப்பாட்டுத் தட்டின் அளவு இருக்கும் இராஜஸ்தான் சுக்கா ரொட்டியின் மீது இரண்டு ஸ்பூன் நெய் தடவி, சூடாக இதனுடன் தொட்டு சாப்பிட்டால் ஆலாதியாக இருக்கும். எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம். 

பின் குறிப்பு : 

இந்த மஞ்சள் கிழங்கு மிகவும் சூடாண அயிட்டம்.அதாவது உடலுக்கு உஷ்ணம் என்று சொல்வார்கள்.அந்த உஷ்ணம் தணிக்கத்தான் நாம் தயிர், மற்றும் சீரகத்தைச் சேர்க்கின்றேம். இந்த கிழங்கு சப்ஜி அல்லது பச்சடி உடலின் உஷ்ணத்தையும், இரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி.

Via FB ஆரோக்கியமான வாழ்வு