கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான
வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு முறையாவது அருந்த வேண்டும். இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.
அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ்
உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது. மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.
பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும் பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது
மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.
மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள். தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி
கிடைக்கும்.
இதற்க்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.
கர்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில் கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும் ஒரு கப் குடிக்க வேண்டும்.