சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips

Photo: சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் :

சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி-மூலிகை குணபாடம் 

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும்,இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை,மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்) 

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி - நெல்லி முள்ளிப் பொடி - நாவல்கொட்டைப் பொடி - வெந்தயப் பொடி - சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை காலை - மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி-மூலிகை குணபாடம்

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும்,இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை,மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்)

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி - நெல்லி முள்ளிப் பொடி - நாவல்கொட்டைப் பொடி - வெந்தயப் பொடி - சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை காலை - மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.