கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips
Photo: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ளும் வெண்ணெய் , பால்,எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது.கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ் நமது செல்களில் பரவுகின்றன. இந்தப்பரவலை சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன .உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இவை நாம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன .தொப்பைக்கு காரணம் இவை தான் . இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது.

அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை ஹார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.
சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள்.ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழாக் காரணமாகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகளவில் சர்க்கரை போட்டு காபி ,டீ ,குடிப்பது , சாக்லேட் ஐஸ்கிரீம்போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கபடாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால் தொப்பை வந்து விடுகிறது.

Via FB ஆரோக்கியமான வாழ்வு