அடி வயிறு குறைய என்ன செய்ய வேண்டும் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:08 PM | Best Blogger Tips

ஒல்லியாக இருப்பவரும் சில அடி வயிறு மட்டும் பெரிதாக இருக்கும்
இதை குறைக்க வழி என்ன ?
Photo: அடி வயிறு குறைய என்ன செய்ய வேண்டும் ? ஒல்லியாக இருப்பவரும் சில அடி வயிறு மட்டும் பெரிதாக இருக்கும்
இதை குறைக்க வழி என்ன ?

இன்று பலருக்கு இந்த தொப்பை என்ற Belly fat(visceral fat) பெரும் பிரச்சனையாக உள்ளது. வழக்கம் போல் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை வைத்து ஆலோசனைகள் தருகிறார்கள்.சிலருக்கு சரியாகி விடுகிறது.வேறு சிலருக்கோ தொடரும் பிரச்சனை. நாம் உணவில் என்றும் கவனமாக இருப்போமானால்.இந்த தொல்லை கிடையாது.வெள்ளம் வரும் முன் அணை கட்டுதல் நல்லதே.வந்த பின் என்ன செய்வது என்பது இப்போது உள்ள கேள்வியாக உள்ளது.முதலில் உடல் பருமனையும்,வயிற்றுப் பருமனான,தொப்பையையும் (அல்லது வண்டி) அங்கே சேரும் வயிற்றுக் கொழுப்பையும் கண்டறிய,உடல்,வயிற்றுப் பகுதியின் வடிவத்தை கண்டு இரு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று ஆப்பிள்(apple) வடிவம்,அடுத்தது பேரிக்காய் (Pear) வடிவம். இதை படத்தில் காணலாம்.அடிப்படை உண்மைகளை தெரிந்து கொண்டால் தீர்ப்பது சுலபமாகி விடும்.

அடுத்து கொழுப்பில் உள்ள வகைகள் 

மண்ணிறம்,வெள்ளை,வெளிக் கொழுப்பு,உட்கொழுப்பு,தொப்பைக் கொழுப்பு. (brown, white, subcutaneous, visceral, and belly fat) எனப் பிரிக்கப்படுகிறது.தொப்பையில் உள், வெளிக் கொழுப்புக்கள் இரண்டுமே உண்டு. இதை வைத்து வடிவம் ஆப்பிளாக அல்லது பியர்ஸ் ஆக வேறுபடுகிறது.இந்தக் கொழுப்பு மேலதிகமான கலோரிகளை சேமித்து,நமக்கு பசி உள்ள சமயம் அதைப் போக்க உதவுகிறது.சில ஹார்மோன் களை வெளியிடவும் உதவுகிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால்……….
பிரவுண் கொழுப்பு, மெலிந்த உடல் உடையவர்களுக்கும்,குழந்தைப் பருவத்தினருக்கும் அதிகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த பிரவுண் கொழுப்பு குளிரான நாட்களில் வெப்பத்தை வெளியிட்டு, குளிரில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை கொழுப்பு பிரவுண் கொழுப்பை விட அதிகமாக இருக்கும்.இது சக்தியை(energy) சேமித்து adiponectin போன்ற ஹார்மோன்களை சுரந்து ஈரல்,தசை போன்றவற்றை சென்சிட்டிவாகவும்,இன்சுலின் ஐ சுரக்கவும்,இதயத்திற்கு தூண்டுதலாகவும் இருக்க வைக்கிறது.ஒருவர் உடல் பருமன் அதிகரிக்க,இந்த ஹார்மோனின் சுரப்பது குறைய அல்லது தடைப்படும் போது பல நோய்கள் ஆரம்பிக்கின்றன.

அடுத்து வெளிக் கொழுப்பு என்ற subcutaneous fat. இது தோலின் நேர் கீழாக,அதாவது தோலை அடுத்து சேமிக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பால் அதிக தீமைகள் இல்லாவிடினும்,தொடை,வயிற்றுப் பகுதிகளில் சேர்ந்து கொள்கிறது.இதனால் தொடைப் பகுதி பருத்தும்,தொப்பையும் ஏற்படுகிறது.

அடுத்து இருப்பது உட்கொழுப்பு எனப்படும், visceral fastஆகும்.இது உடம்பின் உட்பகுதிகளில் சேர்ந்து கொள்வதனால் பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.மிகப் பெரிய வயிறு மற்றும் உடல் பருத்து இருக்கும் ஆண்கள் பெண்களுக்கு இந்த வகை கொழுப்பு அதிகமாக இருக்கிறது என சொல்லலாம்.இதனால் இன்சுலின் தடைபட்டு,சர்க்கரை நோய்,இதயக் கோளாறு,stroke,dementia போன்றவை ஏற்படுகின்றன.தொப்பைக்கும் dementia விற்கும் என்ன தொடர்பு என தெரியாத போதும்,leptin என்ற ஹார்மோனை, தொப்பையில் உள்ள கொழுப்பு வெளியேற்றுவதால்,மூளையை பாதிக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும்.

அடுத்து நாம் எடுத்துக் கொண்ட தொப்பைக் கொழுப்பு பற்றி சொல்ல வேண்டுமெனில்,வெளி, உட்கொழுப்பு இரண்டுமே சேருகிறது.ஆண்கள் 101.6 செ.மீ (40 அங்குலம்) பெண்கள் 88.9 செ.மீ(35 அங்குலம்) கூடாமல் இருப்பது நன்று.அதே சமயம் WHO, ஆசிய நாட்டவர்களில் ஆண்கள் 88.9 செ.மீ (35 அங்குலம்), பெண்கள் 78.7 செ.மீ(31 அங்குலம்) க்கு கூடாது இருப்பது நல்லது என வரையறுத்திருக்கின்றனர். வயிற்றில் இருந்து தொடை வரையிலான கொழுப்பு அதிகரிப்பு சர்க்கரை நோய்க்கு வித்திடலாம்.அதே சமயம் பியர்,pear, ஷேப் பெண்களை விட, அப்பிள் ஷேப் பெண்கள் மிக அவதானம் தேவை என்கிறது ஆய்வுகள்.

இப்போது தொப்பை பற்றிப் பார்த்தால்,உட்கொழுப்பை MRT,CT scan மூலம் கண்டறிய முடியும்.அத்துடன் உட்கொழுப்பை அறிந்து கொள்ள, நமது வயிற்றுப் பகுதியை பார்த்தால் அது ஆப்பிள் வடிவில் இருந்தால் உட்கொழுப்பு அதிகமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். வெளிக் கொழுப்பை கை விரல்களினால் பக்க வயிற்றுப் பகுதியை பிடித்து தெரிந்து கொள்ள முடியும்.வயிற்றுப் பகுதி கொழுப்பினால்,இதய நோய்கள், stroke, சில வகையான புற்று நோய், sleep apnea,எலும்பு அடர்த்திக் குறைவு,dimentia போன்ற நோய்கள் வர வாய்ப்புக்கள் அதிகம்.
வாழ்க்கையின் இடைக்காலத்தில் வளர்ச்சிக் குறவு ஆரம்பமாகும் போது, பொதுவாக தொப்பையும் தொடர ஆரம்பிக்கிறது எனலாம்.cortisol என்ற ஹார்மோன், adrenal சுரப்பிகளில் இருந்து,குளுக்கோஸ் செயலாக்கத்திற்கு உதவி, மன அழுத்தம் போன்றவற்றை கட்டுப் படுத்துகிறது. Stress, cortisol ஐ அதிகரிக்க செய்யும் போது,வயிற்றுப் பகுதியில் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.அதனால் இந்த stress எல்லோருக்குமே பல விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்க முடியும்.
இந்தக் தொப்பைக் கொழுப்பை சிலர் liposuction போன்ற பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் கொழுப்பை வெளியேற்றுகிறார்கள்.உணவுக் கட்டுப்பாடு இல்லாது இப்படி கொழுப்பை வெளியேற்றுவதனால்,மீண்டும் கொழுப்பு சேரவே வழி செய்கிறது.அதனால் இது மிகவும் சரியான முறை என சொல்ல முடியாது.சிலர் வயிற்றுப் பகுதி உடற்பயிற்சி பயன் தரும் என செய்கின்றனர். இப்படி செய்வதால்,தசை நார்கள் இறுக்கம் அடைவதால் என்றுமே குறைக்க முடியாது போய் விடுகிறது.முழு உடலுக்குமான உடற் பயிற்சி உட்கொழுப்பைக் குறைக்க உதவும்.அதனால் நல்ல உடற் பயிற்சியை ஆரம்பித்து சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும்.முழு உடலுக்குமான உடற் பயிற்சி, உடலின் செயலை அதிகரித்து, அதிக கலோரிகளை எரிப்பதால் தொப்பைக் கொழுப்பை குறைக்க முடியும்.

தயாரிக்கப்பட்ட உணவுகள்,fast food,பொரித்த உணவுகள், பிஸ்கற், சிப்ஸ் போன்றவற்றை குறைப்பது,நீக்குவது சிறந்தது.சர்க்கரையும் தொப்பையை அதிகரிக்கும்.முழு தானியம்,பருப்பு(உடைக்கப் படாத,முழு) வகைகள்,நார்ச்சத்து சேர்ந்த பொருட்கள் கொழுப்பை சேராது தடுப்பதுடன்,இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.ஒலிவ் எண்ணை,வெண்ணைப்பழம்(avocados),நிலக்கடலை,பாதாம் பருப்பு (almonds ) கொழுப்பை அழிக்கவல்ல நல்ல கொழுப்புடைய உணவுப் பொருட்களாகும்.
stress இல்லாது,நல்ல தூக்கம் போன்றவையும்,தேவையான தண்ணீர் குடிப்பதும் தொப்பையில் கொழுப்பு சேராமல் விடுவதுடன்,குறைக்கவும் செய்கிறது.இரவில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
நடுத்தர வயதில் பலருக்கு இந்த தொப்பை ஏற்படுவது என்னவோ உண்மையானாலும்,உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றால் தொப்பையை வராமலும்,குறைக்கவும் செய்யலாம்.மாறாக உடற்பயிற்சியும் செய்யாது,உணவுக் கட்டுப்பாடும் இல்லாது,சில மருந்துக்களைப் பாவிப்பதால், தொப்பை குறையப் போவதில்லை என்பதுடன், பின்னர் அதிகமாகி விடும் என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால்,உடல் முழுவதற்குமான காற்றோட்டம் உள்ள இடத்து தொடர் உடற்பயிற்சியினால் தசைநார் திசுவில்(muscle tissue) சேமிக்கப் பட்டிருக்கும் கிளைக்கொஜினை (glycogen) எரிக்க முடியும் என்பதுடன்,நல்ல தூக்கம் ,stress இல்லாமை,உணவுக் கட்டுப்பாடு போன்றவை தான் தொப்பையை குறைக்க ஒரே வழியாகும்.

அந்த காலத்தில் இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை சொல்வார்கள். அதனால் தொடர்ந்து கொள்ளுவை நனைய போட்டு அந்த தண்ணீரையோ அல்லது கொள்ளுவை அவித்து அந்த தண்ணீரையோ குடித்து அவித்த கொள்ளுவை சாப்பிட்டும் வந்தாய் கொழுப்பு காணாமல் போய்விடும். மேலும் வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி அதை தினமும் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது. 

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு