தேவையானப்பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும்.
எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.