தமிழர் பண்பாடு: "தோரணம்."

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:05 | Best Blogger Tips
தமிழர் பண்பாடு: "தோரணம்."

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

மங்கள தோரணம்.
அமங்கள தோரணம்.

மங்கள தோரணம்
மாவிலை தோரணம்
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

அமங்கள தோரணம்
மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

Thanks : Vasanthakumar Graphicdesigner

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் @[297395707031915:274:Relaxplzz] தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

மங்கள தோரணம்.
அமங்கள தோரணம்.

மங்கள தோரணம்
மாவிலை தோரணம்
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

அமங்கள தோரணம்
மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

  Thanks to FB ரிலாக்ஸ் ப்ளீஸ்