ஆஸ்த்மா நிவாரணம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:05 | Best Blogger Tips

Photo: ஆஸ்த்மா நிவாரணம்

துளசிச்சாறுஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்பிடவும்.

மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் சைஸில் தினமும் ஒருநேரம் தொடர்ச்சியாக ஒருமாதம் சாப்பிடவும்.

முருங்கைக்கீரையை பிழிந்த நீரை 1ஸ்பூன் தினமும் 2 வேளை குடிக்கவும்.

மிளகும்,கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.

வெற்றிலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் இவை சமமாக எடுத்து தினமும் 2 வேளை சாப்பிடவும்.

ஆடாதோடா நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும். இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன?

ஆஸ்துமா நோய் இருப்பது தெயவந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

1.   முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

2.   மிளகு கல்பம் (தூள்). இது மிளகுடன் கரிசலாங்கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
 
3.   பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?
 
ஆஸ்துமா நோய்க்குத் தொடர்ந்து 48 நாள் (ஒரு மண்டலம்) மேற்சொன்ன சித்த மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno Modulation)  சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட வேண்டும்.

துளசிச்சாறுஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்பிடவும்.

மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் சைஸில் தினமும் ஒருநேரம் தொடர்ச்சியாக ஒருமாதம் சாப்பிடவும்.

முருங்கைக்கீரையை பிழிந்த நீரை 1ஸ்பூன் தினமும் 2 வேளை குடிக்கவும்.

மிளகும்,கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.

வெற்றிலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் இவை சமமாக எடுத்து தினமும் 2 வேளை சாப்பிடவும்.

ஆடாதோடா நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும். இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன?

ஆஸ்துமா நோய் இருப்பது தெயவந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

1. முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

2. மிளகு கல்பம் (தூள்). இது மிளகுடன் கரிசலாங்கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

3. பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?

ஆஸ்துமா நோய்க்குத் தொடர்ந்து 48 நாள் (ஒரு மண்டலம்) மேற்சொன்ன சித்த மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno Modulation) சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட
வேண்டும்.

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு