கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:30 PM | Best Blogger Tips
Photo: கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க !!!

இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை 
தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் 

நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை 

அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். 

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். 

கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.

நுங்கு மில்க் ஷேக்

இளநுங்கு - 4
பால் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது

நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். மிக்சியில் நுங்கு, பால், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு அருந்தலாம்.

நுங்கு ரோஸ்மில்க்

இளம் நுங்குச் சுளைகள் - 3,
சர்க்கரை - 3 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,
பால் - முக்கால் கப்,
சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன்,
நெய் - அரை டீஸ்பூன்.

நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும். பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். பிறகு, காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி பரிமாறவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது
 
நுங்கு கீர்

பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்

நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.
 
இளநீர் & நுங்கு டிலைட்:

இளநீர் & 2 
நுங்கு & 6 
குளுக்கோஸ் & சிறிதளவு 
ஐஸ் துண்டுகள் & சிறிதளவு 
இளநிரில் குளுக்கோஸைக் கலந்து, நுங்கை பொடிப்பொடியாக நறுக்கிப் போடவும்.ஐஸ் துண்டுகளைப் போட்டு பருகிப் பாருங்கள். சுத்தமான கோடைக்கேற்ற பானம் தயார். 

இதில் இரண்டு, மூன்று பேரிச்சம்பழத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்தும் அருந்தலாம்.
 
நுங்கு ஜூஸ்

நுங்கு - 10
பால் - 4 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
 
இளம் நுங்குகளாக தேர்ந்தெடுக்கவும்.
மேல் தோலை நீக்கிக்கொள்ளவும்.
தோல் நீக்கிய நுங்கை கையால் நன்கு பிசையவும். மிக்ஸியில் ஒரு சுற்று அடித்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
காய்ச்சி ஆறிய பாலில் மசித்த நுங்கு, சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில் என்று பரிமாறவும்

கன்டென்ஸ்டு பால் சேர்க்காமலும் செய்யலாம். கோடை காலங்களில் நோன்பு காலங்களிலும் இந்த ஜூஸ் உடல் சூட்டினை தடுத்து, நன்கு குளிர்சி தரும்.
 
நுங்கு பாயாசம்
 
நுங்கு - 6
ஏலக்காய் - 3
பால் - 3 கப்
சர்க்கரை - சுவைக்கு
 
முதலில் நுங்கின் தோலை நீக்கி கையால் ஒன்றுக்கு இரண்டாக மசித்து கொள்ள வேண்டும்.
பாலை காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
இப்போது நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பாயசம் பதத்திற்கு கலக்கவும்.
சுவையான நுங்கு பாயாசம் தயார்.

இது வித்தியாசமான , அலாதி சுவையுடைய பானம். இளம் நுங்காக இருந்தால் சுவை கூடும். குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் அருந்தவும்.
 
நுங்கு சாலட்
 
நுங்கு - 6  
சுகர் லைட் (அ) தேன் - தேவையான அளவு  
பால் - 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)  
ஏலக்காய் தூள் - சிறிதளவு 

பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும் 
நுங்கின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட் (அ) தேன் சேர்க்கவும்.  
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.
 
நுங்கு பானம்

பனை நுங்கு - 8 
பால்- 400 மில்லி 
சர்க்கரை - 200 மில்லி 
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு 

பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.
பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும். 
இதில் ரோஜா எசன்ஸ், சர்க்கரையைச் கலக்கவும் 
நுங்கை மிக்சியில் நன்கு அடித்து பால் கலவையில் சேர்த்து பிரிட்ஜுல்  சிறிது நேரம் வைத்து எடுத்தால் 'ஜில்' பானம் தயார். 
கோடை வெயிலுக்கு இதமான பானம் இது, 
கோடை வெயிலின் பாதிப்பைத் தடுப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது நுங்கு.

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு