குழந்தைகளைச் சாப்பிட வைக்க சில டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

குழந்தைகளைச் சாப்பிட வைக்க சில டிப்ஸ்

குழந்தைகளுக்கு விதம் விதமான சத்தாண உணவுகளைத் தர வேண்டும். அப்போதுதான் சாப்பிட விரும்புவார்கள். 

ஒரு புது உணவினை உங்கள் குழந்தைக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் போது அவர்கள் உண்ண மறுப்பார்கள். அதையே அவர்களுக்கு விருப்பமான கார்டூன் கதைகள் சொல்லியபடியே ஊட்டிவிட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உதாரணம் பப்பாயி. பப்பாயி செய்லருக்கு பிடிச்ச ஜூஸ் என்னன்னு என்று கேட்கையில் மிஸ்டர் வாண்டு புதினா என்று சொல்லும், அந்த புதினாவைத் தான் அம்மா க்ரீன் சட்னியா பண்ணியிருக்கேன், பப்பாயி மாதிரி உறுதியானவனா வருவே எனும் போது குட்டீஸ் இது வேணாம் அது வேணாம் என்று அடம் பிடிக்காமல் சமத்தாக சாப்பிட்டுவிடும்.

சம்மர் லீவ் முடிந்து, பள்ளி செல்லும் குழந்தைக்கான ஒரு நாளைக்கான சமச்சீர் உணவு -   

குழந்தையின் வயதைப் பொருத்து அது மாறுபடும். ஆனாலும் எல்லா குழந்தைகளும் கட்டாயம் மூன்று வேளை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் ஸ்னாக்ஸ் சாப்பிடக் ஊடாது. தினமும் இரண்டு க்ளாஸ் பாலும் 100 கிராம் பழமும் உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி சோர்ந்து போகும் குழந்தைகளுக்கு..

குழந்தைகள் மதிய உணவை சரியாக சாப்பிடவில்லை என்றால் வீட்டுக்கு வரும் போதே சோர்வாக வருவார்கள். அப்போது அவர்கள் எதாவது சுடச் சுட உண்ண ஆசைப்படுவார்கள். அந்த சமயம் அவர்களுக்கு ஸ்னாக்ஸ் அல்லது வெறும் பால் மட்டும் தரக் கூடாது, நல்ல சத்தான டிபன் அல்லது சாதம் தர வேண்டும். உடனே படிக்க ஆரம்பி என்றோ, ட்யூஷனுக்கு லேட் ஆயிருச்சு போ என்றோ பிள்ளைகளை விரட்டக் கூடாது. கொஞ்ச நேரமாவது க்ரவுண்டில் விளையாடிவிட்டு வர அனுமதிக்க வேண்டும். 

வளர்ச்சி என்பது உடலுக்கானது மட்டும் அல்ல, குழந்தைகள் எல்லா விதத்திலும் வளர்ந்தால் தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் குழந்தைகளை போன்சாய் மரங்களைப் போல அடக்கி அடக்கி நம் கைக்குள் வைத்துக் கொண்டு வளர்க்க நினைத்தால் சீக்கிரம் சோர்ந்து விடுவார்கள்.

நன்றி Doctor Vikatan