தன் ஃபிட்னெஸ்குறித்து - சைலேந்திரபாபு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

‘‘ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்’’ என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது.  வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன். 

பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய ‘ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன்.   காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன்.  அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.‘‘ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்’’ என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது. வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன்.

பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய ‘ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன். காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன். அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.
 
Thanks to Doctor Vikatan