சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips


சுதேசி இயக்கம் மக்களிடையே சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லா துறைகளிலும் இந்தியர்கள் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்து வருகிறது. இந்தியர்களால் உற்பத்தியில் உலகத்தோடு போட்டி போட முடியும் என்பதை ஆதாரத்தோடு எடுத்து காட்டி வருகிறது. இன்று இருக்கும் சூழலில் பொருளாதார முன்னேற்றம் என்றால் மேற்கத்திய நாடுகள் தான் என்ற அடிமை சிந்தனையை மாற்றி சுய தர்மம், சுய மரியாதை, சுய தொழில், சுய பாஷை, சுய ராஷ்ட்ரம், சுய ராஜ்யம் என்று சுய சார்ப்பான ஆறு கருத்துகளை மக்களிடையே எடுத்து செல்கிறது. இதற்கு அவசியம் என்ன என்று கேட்டால் சுதர்மத்தை எடுத்து செல்வதும் சுய மரியாதையை மீட்பதும் தான்.

சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. தனியான பொருளாதார கோட்பாடு அல்ல. சமூக பொருளாதார கோட்பாடு தான் சுதேசி. ஆகவே சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் செய்து வருகிறது. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம்.

தமிழ் நாட்டில், இந்தியாவில் உங்கள் இயக்கத்தினால் விளைந்த நல்ல பலன்கள் என்ன?

1991 ல் புதிய பொருளாதார கொள்கை வந்த பொழுது இந்திய உற்பத்தியாளர்களிடம் எல்லாம் உங்களுக்கு உற்பத்தி தெரியாது உற்பத்தியை மேற்கத்திய நாடுகளிடம் விட்டு விடுங்கள். வியாபாரத்தை மற்றும் கவனியுங்கள் என்று மத்திய அரசாங்கமும் பல்வேறு தொழில் அமைப்புகளால் அமர்த்தப்பட்ட ’வழிக்காட்டும் குழுக்களும்’ கூறின. அப்படி அல்ல என்பதை இந்திய கம்பெனிகள் மூலம் நிருபிக்க வைத்த அமைப்பு சுதேசி இயக்கம். உதாரணமாக டாடா மோட்டாரை சொல்லலாம். இந்திய கடல்களில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு வெளி நாட்டு கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த பொழுது இந்தியாவில் கல்கத்தாவில் தொடங்கி கொச்சி வரையிலும் குஜராத்தில் தொடங்கி கொச்சி வரையிலும் கப்பல் யாத்திரை நடத்தி அதன் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மத்திய அரசின் இந்த திட்டத்தை முடக்கி அதனை ரத்து செய்ய வைத்தது சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சாதானை.

என்ரான் என்ற கம்பெனி இந்தியாவிற்கு மின்சாரம் தயாரிக்கிறேன் என்ற வந்த பொழுது அதனை ஆதாரங்களுடன் எதிர்த்து உண்மையை மக்களுக்கு புரிய வைத்தது சுதேசி இயக்கம். தொடக்கத்தில் மத்திய மாநில அரசு இதை ஏற்று கொள்ளவில்லை. என்ராட் கம்பெனியே திவால் நோட்டிஸ் கொடுத்த பின்பு தான் மத்திய மாநில அரசுகளுக்கு சுதேசி விழிப்புணர்வு இயக்கதின் போராட்டத்திற்கான காரணம் புரிந்தது. அயோடின் உப்பு, பெரிய கம்பெனிகள் தீ பெட்டி தயாரிப்பு போன்றவற்றை எல்லாம் மாற்றி அமைத்து சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தியது சுதேசி இயக்கம் .இந்த பட்டியல் நீளும். அதற்கும் மேலாக இந்திய உற்பத்தியாளர்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத நாட்டின் 80க்கும் மேற்பட்ட நகரங்களில் ” SWADASHI INDUSTRIAL FAIR ‘ என்ற பெயரில் சுதேசி தொழில் கண்காட்சிகள் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 2001 பிப்ரவரி 6 முதல் 11 வரை கோவையில் நடைபெற்ற சுதேசி தொழிற் கண்காட்சி அப்பொழுது கோவை குண்டு வெடிப்பால் சோர்ந்து போயிருந்த கோவை தொழில் முனைவோர்களிடம் ஊக்கத்தையும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பது இன்று வரை தொழில் முனைவோர்கள் சொல்லபடும் ஒன்று. தமிழகத்தில் சுதேசி இயக்கம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தி கல்வி நிறுவனங்கள் மூலம் தொழிற் நிறுவனங்களுக்கான ஆய்வுகளை மேற் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது. இதனால் அதிக அளவில் கல்வி நிறுவனங்களும் சிறு தொழிற் நிறுவனங்களும் சுதேசி இயக்கத்தோடு தங்களை இணைத்து கொண்டு உள்ளன. சுதேசி இயக்கம் நடத்தும் சுதேசி செய்தி என்ற மாதந்திர பத்திரிக்கை இவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக இது விஷயமாக அதிக அளவில் ஊடங்களால் விவாதிக்கப்பட்டதால் இந்த நேர்காணலில் அவை பற்றி எதுவும் குறிப்பிட நான் விரும்பவில்லை. குறிப்பாக ஒபாமா போன்றவர்கள், “இந்தியாவின் கல்வி சிறந்து இருக்கிறது. நாம் சோம்பேறிகளாக இருந்தால் நமது குழந்தைகளின் எதிர் காலம் பறி கொடுக்க நேரிடும்” என்று சொல்லிவரும் வேளையில், நமது மத்திய கல்வி அமைச்சர் நமது கல்வி நிலையங்களை வெளி நாடுகளுக்கு விற்க வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.

வெளி நாட்டு கம்பெனிகள் தங்கள் சரக்குகளை இந்தியாவில் எளிதாக எல்லா பகுதிகளிலும் கொண்டு செல்லும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளில் சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

விவசாயத்தில் பல்வேறு சட்ட மசோதாக்கள், வரி விதிப்பில் பல்வேறு சட்ட மசோதக்கள், கல்வி துறையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் மட்டும் இல்லாமல் இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் வகையில் மத வன்முறை தடுப்பு சட்டம் என்ற பெயரில் மத வன்முறையை துண்ட கூடிய சட்ட மசோதக்களை மத்திய அரசாங்கம் கொண்டு வருவது இந்தியாவை யாரோ ஒரு சிலருக்கு அடமானமாக வைக்க கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்களாக சுதேசி இயக்கம் பார்க்கிறது.

Bio Technology Regulatory Authoritative Bill
Mines and Mineral Bill
Seed Bill 2010 (modified)
Goods and Service tax amendment Bill
Pension fund regulatory and authority Bill
Land acquisition Rehabilitation and Resettlement Bill
Foreign University Bill
ஆகிய மசோதாக்கள் பற்றியும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம், ( Food safety and Standard act ) தேசிய நீர் கொள்கை ( National Water policy ) ஆகியன பற்றியும் யாத்திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.



இந்த மசோதாக்களை எதிர்த்து இந்த பிரச்சாரம் செய்யபடுகிறது. யாத்திரையின் நோக்கம் இதோடு நின்று விடவில்லை. பிரச்சாரத்திலேயே ஒரு ஆய்வு குழுவும் செல்கிறது. பிரச்சாரம் செல்லும் பகுதிகளில் உள்ள இடங்களில் பாரம்பரிய வளங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பற்றிய தகவல்களையும் சேகரிக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிஸ்டுகள் தனது மைய புள்ளியை வேறு தேசத்தில் வைத்து ஒரு வட்டத்தை வரைகிறது. இவ்வாறு வரையப்படும் வட்டம் இந்தியாவின் பல பகுதிகளை வெட்டுகிறது. ஆனால் சுதேசி இயக்கம் தனது வட்டத்தை இந்தியாவை மைய புள்ளியாக கொண்டு வரைகிறது. கம்யூனிஸ்டுகளின் கொள்கை அனைத்தும் பாரம்பரிய எதிர்ப்பாகவும் இயற்கையோடு இணைந்த மண்ணின் மணம் கூடிய தொழில் நுட்ப விசயங்களை புறம் தள்ளி விட்டு குடும்ப வாழ்வியல் ஊழியங்களை உடைப்பதாகவும் தான் இருக்கிறது. சமுதாயத்தனிடையே வர்க்க பேதங்களை உருவாக்கி அமைதிக்கு பதிலாக அமைதியின்மையை தோற்றுவிக்கிறது. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது.

இந்த நாட்டில் இருக்க கூடிய பாரம்பரிய தொழில் அறிவையும் அந்தந்த பகுதிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ள தொழில் நுட்பங்களை பாதுகாத்து அதை வெளி கொண்டு வரும் பணியை சுதேசி இயக்கம் செய்து வருகிறது. கம்யூனிஸ வரலாறே அழிப்பது தான். இதன் காரணமாக சோவியத் ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்டு போனது. கம்யூனிஸம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த சீனா தனது பாரம்பரிய செல்வங்களை எல்லாம் அழித்து விட்டு இன்று பரிதாபமாக முதலாளித்துவத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறது. மியன்மார் என்று அழைக்கபடும் பர்மா வளர்ச்சி ஒன்றும் இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அழித்தல் கம்யூனிசம் என்றால் ஆக்கல் சுதேசி இயக்கமாக இருக்கும்.


 
நன்றி  விஜய பாரத