சித்த மருத்துவம் - தலைவலி குணமாக

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips

http://www.spottamil.com/sites/default/files/styles/large/public/field/image/headache_couple_argue_break-up.jpg 
 1.தலை பாரம் குறைய:-வேப்பம் புண்ணாக்கைச் சுட்டு மூக்கில் உறிஞ்ச தலை பாரம் தீரும்.

2.தலை நீரேற்றம்,தலைக்கனம் நீங்க:-தும்பைப் பூவை நல்லெண்
ணையில் காய்ச்சித் தலை முழுகி வர தலை நீரேற்றம்,தலைக்கனம் குறையும்.

3.தலை பாரம் குறைய:- மஞ்சளின் மீது (விரலி மஞ்சள்)விளக் கெண்ணெய் தடவி விளக்கில் வாட்ட வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வர தலை பாரம் குறையும்.

4.தலைக் கனம் தீர:-இஞ்சிச்சாறு,பால்,நல்லெண்ணை சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு முறை மூழ்கி வர தலைக்கனம் தீரும்.

5.தலைப்படிப்புத் தீர:-கொடுவேலி வேர்ப் பட்டையை அரைத்துப் பாலில் 21 நாட்கள் குடித்து வர தலைப் பிடிப்புத் தீரும்.

6.தலை நீர்க் கோவை தீர:-நல்ல வேளைச் சமூலத்தை இடித்துப் பழிந்த சக்கையைத் தலையில் வைத்துக் கட்ட தலை நீர்க்கோவை தீரும்.

7.நீர்க்கோவை தீர:-கருவேப்பிலைப் பொடி 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை,மாலை சாப்பிட்டு வர தலை நீர்க்கோவை தீரும்.

8.மூக்கடைப்பு,தலைபாரம் நீங்க:சுண்டைவேர்,தும்பைவேர்,இலுப்பைப்
புண்ணாக்கு சம எடை பொடியாக்கிச் சேர்த்துத் துணியில் கட்டி நாசியில் நுகர மூக்கடைப்பு,தலைபாரம் குணமாகும்.

9.மூக்கல் நீர்வடிதல்,தலைபாரம் குணமாக:-சிறு தேட்கொடுக்கு இலைச் சாறு,நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர மூக்கில் நீர் வடிதல்,தலைபாரம் தீரும்.

10.தலைச்சுற்று,கிறுகிறுப்பு குணமாக:-நெல்லிக்காய்ச் சாறு நாள் 1க்கு ஒரு அவுன்ஸ் வதம் குடி;த்து வரத் தீரும்.

11.தலைவலி குணமாக:-அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவி வர மாறும்.

12.நாட்பட்ட தலைவலி குணமாக:-குங்குமப் பூவைத் தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வரக் குணமாகும்.

13.சகல விதமான தலைவலியும் தீர:-மிளகாய் வற்றல்,மிளகு இவை இரண்டையும் நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரவும்.

14.தலைசுற்றல்,இரத்தக் கொதிப்பு (டிடழழன pசநளளநச) நீங்க:-நெல்லி வற்றல் ,பச்சை பாசிப் பயிறு கசாயம் வைத்துச் சாப்பிட்டு வரத் தீரும்.

15.தலைவலி குணமாக:-சுக்கை தாய்ப்பால் அல்லது பசுவின் பாலில் அரைத்து பற்றுப் போட்டு வரத் தலை வலி தீரும். தொடரும்!
 
Thanks to Gnanayohi Yohi