பனை ஓலை கொழுக்கட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:31 | Best Blogger Tips

Photo: பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்

செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். 

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும். 

இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். 

இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்

மற்றொரு முறை:
(முஸ்லிம்கள் செய்முறை) 

பனை ஓலை - 20 துண்டுகள்
பச்சரிசி மாவு - 1/2 கிலோ
கருப்பட்டி அல்லது வெல்லம் - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன்
சுக்கு தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய்ப்பூ - 2 கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
 
வாணலியில் மாவை சிறிது வறுத்து கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது நீர் விட்டு, நன்கு பாகாக காய்ச்சவும். அதை அப்படியே சூட்டோடு மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.
இதில் சுக்கு தூள், ஏலக்காய் தூள், தேங்காய்ப் பூ ஆகியவற்றை போடவும். பாசிப்பருப்பை வறுத்து கொட்டவும். எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக கிளறவும்.
பனை ஓலையை ஆறு அங்குல துண்டுகளாக நறுக்கி கழுவவும். சிறிது மாவை கையிலெடுத்து ஒரு பிடி பிடித்து இலையில் வைத்து மூடி சுருட்டி வைக்கவும்.
இப்படியே எல்லாமாவையும் இலையில் வைத்து சுருட்டவும்.
பின்பு சுருட்டிய கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.(அரை மணி நேரம்). பின்னர் ஆறவிட்டு எடுக்கவும்.
ஓலையில் ஒட்டாமல் அழகாக வரும். இது 3 நாள் வரை கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.

இது கன்னியாகுமரி மாவட்டத்தில் முஹரம் மாதத்தில் செய்வார்கள். பனைஓலை இல்லாமலும் சும்மா கையால் மாவை பிடித்து பானையில் வைத்து அவித்து எடுக்கலாம்

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு