மான்களைக் காக்க... மரங்களைக் காக்க...
உயிரையே கொடுக்கும் உன்னத மக்கள்!
மரங்கள் மற்றும் வனவிலங்குகளை வகை, தொகை இல்லாமல் அழித்தொழிக்கும்
இன்றையச் சூழலில், அவற்றின் பாதுகாப்பை மட்டுமே தமது தார்மீகக் கடமையாக
கொண்டு, அதிலிருந்து துளியும் விலகாது வாழ்ந்து கொண்டிருக்கிறது பழங்குடிச்
சமூகம் ஒன்று என்றால்... ஆச்சரியம்தானே! ‘பிஷ்னோய்’ என அழைக்கப்படும் அந்த
மக்களின் முக்கியக் கொள்கையே... ‘வனவிலங்குகள் மற்றும் தாவரங்களிடம் அன்பு
செலுத்த வேண்டும்’ என்பதுதான்.
இந்தியாவில்... ராஜஸ்தான்,
மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட்,
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும்
பரவலாக உள்ளனர். ராஜஸ்தானில் சூரியன் முதலில் உதிக்கும் நகரம் ஜோத்பூர்.
மார்வார் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த இப்பகுதியில் அதிகளவில்
வசிக்கிறார்கள் பிஷ்னோய் மக்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள
ஆசைப்பட்டு ஜோத்பூருக்குச் சென்றோம்.
சமீபகாலத்தில் இப்பகுதியைப்
பிரபலமாக்கியவர்... பாலிவுட் நடிகர் சல்மான்கான். காரணம்...? அங்கே அவர்
நடத்திய மான்வேட்டை. இதன் காரணமாக வனவிலங்குச் சட்டத்தின் கீழ் இவர் மீது
வழக்கு பாய்ந்தது. இதற்கு காரணமாக இருந்ததே... இந்த பிஷ்னோய் மக்கள்தான்!
1485-ம் ஆண்டில் குரு ஜம்பேஷ்வர் என்பவரால் வழிநடத்தப்பட்ட இந்த சமூகம்,
சுத்தம், அன்பு, அகிம்சை, விலங்-குகளுடன் நேசம், மரங்களுடன் பாசம்... என 29
நல்வழிகளை தார்மீகக் கடமையாகக் கொண்டிருக்கிறது (‘பிஷ்னோய்‘ என்றால்
இருபத்து ஒன்பது என்றும் ஓர் அர்த்தம் உண்டு).
குரு
ஜம்பேஷ்வர்தான் இச்சமூகத்தின் கடவுள். ஜோத்பூரிலிருந்து சுமார் 30 கிலோ
மீட்டர் தூரம் பயணித்து, ‘பாக்தா கீ தனி’ என்கிற கிராமத்தை அடைந்தோம்.
அங்கு சிங்காரா மான்கள், பிஷ்னோய் சமூகத்தினரின் வீட்டு விலங்குகள் போல்,
அச்சமில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தன. முப்பது வீடுகளே இருக்கும்
அக்கிராமத்தின் முக்கியத் தொழில்கள்... விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு.
ஷியாம் பிஷ்னோய் என்பவரிடம் பேசியபோது, இங்கே இருக்கும் விலங்குகள்,
மரங்கள் அனைத்தையும் எங்களின் குழந்தைகளாகவேதான் பார்க்கிறோம்.
மான்குட்டிகளுக்கு தங்களின் மார்பிலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு
அவற்றுடன் நெருங்கி வாழ்ந்து வருகிறார்கள் இங்குள்ள பெண்கள்.
இதோ... கிரணிடம் கேட்டுப் பாருங்களேன் என்றபடி தன் மனைவியை அறிமுகப்படுத்தினார்.
‘‘நான் கூட மான்குட்டிகளுக்கு பாலூட்டியிருக்கிறேன். தாய் மான் இறந்து
விடும்போது, அதற்கு வேறு மான்கள் பாலூட்டு-வதில்லை. இந்தக் குட்டியும்,
வேறு மானிடம் பால் குடிக்காது. இந்த நிலையில் அந்த அநாதைக் குட்டிகளை வாழ
வைப்பதற்காக...
-பசுமை விகடன், 10.09.2012
மான்களைக் காக்க... மரங்களைக் காக்க...
உயிரையே கொடுக்கும் உன்னத மக்கள்!
மரங்கள் மற்றும் வனவிலங்குகளை வகை, தொகை இல்லாமல் அழித்தொழிக்கும் இன்றையச் சூழலில், அவற்றின் பாதுகாப்பை மட்டுமே தமது தார்மீகக் கடமையாக கொண்டு, அதிலிருந்து துளியும் விலகாது வாழ்ந்து கொண்டிருக்கிறது பழங்குடிச் சமூகம் ஒன்று என்றால்... ஆச்சரியம்தானே! ‘பிஷ்னோய்’ என அழைக்கப்படும் அந்த மக்களின் முக்கியக் கொள்கையே... ‘வனவிலங்குகள் மற்றும் தாவரங்களிடம் அன்பு செலுத்த வேண்டும்’ என்பதுதான்.
இந்தியாவில்... ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக உள்ளனர். ராஜஸ்தானில் சூரியன் முதலில் உதிக்கும் நகரம் ஜோத்பூர். மார்வார் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த இப்பகுதியில் அதிகளவில் வசிக்கிறார்கள் பிஷ்னோய் மக்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஜோத்பூருக்குச் சென்றோம்.
சமீபகாலத்தில் இப்பகுதியைப் பிரபலமாக்கியவர்... பாலிவுட் நடிகர் சல்மான்கான். காரணம்...? அங்கே அவர் நடத்திய மான்வேட்டை. இதன் காரணமாக வனவிலங்குச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பாய்ந்தது. இதற்கு காரணமாக இருந்ததே... இந்த பிஷ்னோய் மக்கள்தான்!
1485-ம் ஆண்டில் குரு ஜம்பேஷ்வர் என்பவரால் வழிநடத்தப்பட்ட இந்த சமூகம், சுத்தம், அன்பு, அகிம்சை, விலங்-குகளுடன் நேசம், மரங்களுடன் பாசம்... என 29 நல்வழிகளை தார்மீகக் கடமையாகக் கொண்டிருக்கிறது (‘பிஷ்னோய்‘ என்றால் இருபத்து ஒன்பது என்றும் ஓர் அர்த்தம் உண்டு).
குரு ஜம்பேஷ்வர்தான் இச்சமூகத்தின் கடவுள். ஜோத்பூரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ‘பாக்தா கீ தனி’ என்கிற கிராமத்தை அடைந்தோம். அங்கு சிங்காரா மான்கள், பிஷ்னோய் சமூகத்தினரின் வீட்டு விலங்குகள் போல், அச்சமில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தன. முப்பது வீடுகளே இருக்கும் அக்கிராமத்தின் முக்கியத் தொழில்கள்... விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு.
ஷியாம் பிஷ்னோய் என்பவரிடம் பேசியபோது, இங்கே இருக்கும் விலங்குகள், மரங்கள் அனைத்தையும் எங்களின் குழந்தைகளாகவேதான் பார்க்கிறோம். மான்குட்டிகளுக்கு தங்களின் மார்பிலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு அவற்றுடன் நெருங்கி வாழ்ந்து வருகிறார்கள் இங்குள்ள பெண்கள்.
இதோ... கிரணிடம் கேட்டுப் பாருங்களேன் என்றபடி தன் மனைவியை அறிமுகப்படுத்தினார்.
‘‘நான் கூட மான்குட்டிகளுக்கு பாலூட்டியிருக்கிறேன். தாய் மான் இறந்து விடும்போது, அதற்கு வேறு மான்கள் பாலூட்டு-வதில்லை. இந்தக் குட்டியும், வேறு மானிடம் பால் குடிக்காது. இந்த நிலையில் அந்த அநாதைக் குட்டிகளை வாழ வைப்பதற்காக...
-பசுமை விகடன், 10.09.2012